சொன்ன தேதில டெலிவரியை தொடங்கீட்டாங்க! எல்லாரும் அவ்ளோ சந்தோஷமா டெலிவரி எடுத்துட்டு போறாங்க! விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா கர்வ் ஐசிஇ (Tata Curvv ICE) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் இவை அறிமுக சலுகை விலை (Introductory Price) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதாவது வரும் அக்டோபர் 31ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். அதற்கு பிறகு, டாடா கர்வ் ஐசிஇ காரின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) காருக்கு நேரடி போட்டியாக, டாடா கர்வ் ஐசிஇ கார் களமிறக்கப்பட்டுள்ளது.

டாடா கர்வ் ஐசிஇ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் Hyperion டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் Kryojet டீசல் ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான வசதிகளில் ஒன்றாக உள்ளது. இதுதவிர 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும், டாடா கர்வ் ஐசிஇ காரில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பின் பகுதியில் சாய்த்து கொள்ள கூடிய வகையிலான இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும், டாடா கர்வ் ஐசிஇ காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் டாடா கர்வ் ஐசிஇ காரின் டெலிவரி (Delivery) பணி தற்போது நாடு முழுக்க தொடங்கப்பட்டுள்ளது. கர்வ் ஐசிஇ காரின் டெலிவரி பணி, செப்டம்பர் 12ம் தேதி (இன்று) தொடங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல், டாடா கர்வ் ஐசிஇ காரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ் ஐசிஇ காரை முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள், தற்போது ஆர்வமாக டெலிவரி எடுத்து வருகின்றனர். எனவே இனி வரும் நாட்களில் இந்திய சாலைகளில், டாடா கர்வ் ஐசிஇ காரை நாம் காண முடியும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளதால், டாடா கர்வ் ஐசிஇ கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் பசால்ட் காருடன் மட்டுமல்லாது, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹோண்டா எலவேட் (Honda Elevate), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுடனும், டாடா கர்வ் ஐசிஇ போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








