நாள் குறிச்சுட்டாங்க! காலண்டர்ல இப்பவே தேதிய நோட் பண்ணி வெச்சிருங்க! மாருதி, ஹூண்டாய் பொழப்பில் மண் விழ போகுது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா கர்வ் ஐசிஇ (Tata Curvv ICE) கார், நேற்று (செப்டம்பர் 2) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டாடா கர்வ் ஐசிஇ காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. இந்த சூழலில், டாடா கர்வ் ஐசிஇ காரின் டெலிவரி (Delivery) பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற கேள்விக்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது. இதன்படி டாடா கர்வ் ஐசிஇ காரின் வாடிக்கையாளர் டெலிவரி பணிகள் வரும் செப்டம்பர் 12ம் தேதியில் (September 12) இருந்து தொடங்கப்படவுள்ளன.

டாடா கர்வ் ஐசிஇ காரில், லெவல் 2 அடாஸ், கூல்டு க்ளவ் பாக்ஸ், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 360 டிகிரி கேமரா என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

Tata Curvv

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், முன்பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகிய வசதிகளும், டாடா கர்வ் ஐசிஇ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. டிசைனை (Design) பொறுத்தவரையில், ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், எல்இடி லைட் பார்கள், மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tata Curvv Side Design

இந்திய சந்தையில் டாடா கர்வ் ஐசிஇ காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.69 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். அதற்கு பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா கர்வ் ஐசிஇ காரின் வருகை, சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவை எல்லாம் தவிர, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹோண்டா எலவேட் (Honda Elevate), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடனும், டாடா கர்வ் ஐசிஇ போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 17:27 [IST]
English summary
Tata curvv ice delivery from september 12 all details
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+