சிட்ரோன் இந்த டாடா கார நினைச்சு இப்பவே பதறிட்டு இருக்கும்.. நாளை அறிமுகமாகிறது டாடா கர்வ் ஐசிஇ வெர்ஷன்!

கடந்த ஆகஸ்டு மாதத்தைப் போலவே இந்த செப்டம்பர் மாதத்திலும் நிறைய புதுமுக கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்தவகையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் புதுமுக கார் மாடல் ஒன்றும் நாட்டில் இந்த மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. டாடா கர்வ் (Tata Curvv) மாடல்தான் அது. இது ஓர் கூபே எஸ்யூவி (Coupe SUV) வகை கார் மாடல் ஆகும். இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இன்னும் அதிக நாட்கள் எல்லாம் இல்லைங்க. நாளைய தினமே இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இந்த காரை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மின்சார வெர்ஷனான கர்வ் இவி (Curvv EV)-யின் அறிமுகத்தின்போதுதான் இதையும் டாடா வெளியீடு செய்தது. இந்த நிலையிலேயே நாளைய தினம் கர்வ்-வை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றனர். இதன் வருகை சிட்ரோன் பசால்ட் கார் மாடலுக்கே மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது.

Tata curvv ice launching tomorrow

இது விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு மக்கள் பார்வைக்காக கர்வ்-ஐ ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியைகூட டாடா மோட்டார்ஸ் தொடங்கிவிட்டது. விரைவிலேயே இந்த காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விபரங்களையும் அதிகாரப்பூர்வ அறிமுக நாளான நாளைய தினத்தில் எதிர்பார்க்கலாம்.

டாடா கர்வ் ஐசிஇ வெர்ஷன் பற்றிய ஒரு சில முக்கிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நாளைய தினமே அதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக விலை மற்றும் டெலிவரி போன்ற மிக முக்கிய விபரங்கள்கூட நாளையே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேரியண்டைப் பொருத்த வரை இந்த காரில் நான்கு விதமான வேரியண்டுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டீவ் மற்றும் அக்காம்ப்ளிஷ்டு ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, உருவத்தில் கர்வ் இவி-யிடமிருந்து சற்றே மாறுபட்டுக் காட்சியளிப்பதற்கான வேலைகளையும் இந்த வெர்ஷனில் டாடா பார்த்திருக்கின்றது.

அந்தவகையில், காற்றை உள்ளே அனுமதிக்கும் வசதிக் கொண்ட கிரில், பெரிய காற்று நுழையும் துளைகள், 18 அங்குல அலாய் வீல்கள், கர்வ் எனும் பேட்ஜ் ஆகியவை இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இவையே கர்வ்-வை, கர்வ் இவியிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.

தொடர்ந்து, இந்த கூபே எஸ்யூவி காரை அலங்கரிக்கும் சிறப்பு வசதிகள் இன்னும் பல எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், டோருடன் டோராக இருக்கக் கூடிய ஃப்ளஷ் வகை கைப்பிடிகள், மெல்லிய இழை போன்ற டிஆர்எல் மற்றும் அதிக பிரகாசமான ஒளியை வழங்கக் கூடிய எல்இடி ஹெட்லைட் ஆகியவையும் இந்த காரில் கிடைக்க இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை கர்வ் கார் மாடலில் புதிதாக ஹைபரியான் என பெயரிடப்பட்ட 1.2 லிட்டர் ஜிடிஐ டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 124 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

இத்துடன், 1.2 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்சின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதே எஞ்சினே நெக்ஸானிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மோட்டார் 119 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த இரண்டு பெட்ரோல் மோட்டார்களுடன் சேர்த்து ஓர் டீசல் எஞ்சினும் கர்வ்-இல் வழங்கப்பட இருக்கின்றது.

117 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.5 லிட்டர் கைரோடெக் டீசல் எஞ்சினே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், கியர்பாக்ஸைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிஏ ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவையே எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக கர்வ் இருக்கின்றது. இந்த காரின் விலை என்னவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த கார் காதலர்களின் கனவாக இருக்கின்றது. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே இந்த கார் மடால் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் சிட்ரோன் பசால்ட்-க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இந்த காரின் வருகை பிரெஞ்சு நிறுவனமான கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோனுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 1, 2024, 5:00 [IST]
English summary
Tata curvv ice launching tomorrow engine and features details are here
மேலும்... #tata motors #Tata Curvv ICE #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+