இவ்வளவு கம்மி விலையா? டாடா கர்வ் பெட்ரோல்/ டீசல் இன்ஜின் கார்களின் விலை வெளியானது!
டாடா நிறுவனம் ஏற்கனவே தனது கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அப்பொழுது தனது கம்பஷன் இன்ஜின் கார்களையும் காட்சிப்படுத்தியிருந்தன. இதற்கான விலை அறிவிப்புகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூபாய் 9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த கார்கள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் கூபே வடிவமைப்பு கொண்ட ஒரு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த கார்கள் வடிவமைப்பிலிருந்து நிலையில், தற்போது இந்த கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்கனவே இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அப்பொழுது இந்த காரில் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் அப்பொழுது விலைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

செப்டம்பர் 2ம் தேதி இன்று இந்த காருக்கான விலைகள் எல்லாம் அறிவிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனம் இதற்கு கார்களின் விலையை அறிவித்துள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது. பல்வேறு விதமான வேரியன்ட் குறித்த விபரங்களும் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த இரண்டு காரின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பில் தான் இருக்கிறது.
டாடா கர்வ் காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரை மொத்தம் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக 1.2லிட்டர் டிஜிஐ டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 123 எச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக டாடா நெக்ஸான் காரில் உள்ள அதே 1.2லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 118 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொறுத்தவரை 116 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் விலையை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் உள்ள கார் குறைந்தபட்சமாக ரூபாய் 9,99,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அடுத்ததாக டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை ரூபாய் 11,49,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

அடுத்ததாக டிசிஐ கியர் ஆப்ஷனை பொருத்தவரை ரூபாய் 12,49,990 என்று ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஜிடிஐ இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை ரூ 13,49,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அடுத்ததாக இந்நிறுவனம் ஆரம்ப விலையிலான கார்களில் உள்ள அம்சங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளன.
இந்நிறுவனம் பெட்ரோல் இன்ஜின் உடன் ரூ9,99,990 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காரில் செக்மெண்டிலேயே முதல் அம்சங்கள் கொண்டதாக பல்வேறு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக ப்ரீமியம் கூபே டிசைன் ப்ரீமியமான உட்புற கட்டமைப்பு, ஐந்து ஸ்டார் கொண்ட அட்லஸ் கட்டமைப்பு, 500லிட்டர் பூட் வசதி, 208மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஃப்ளாஷ் டோர் ஹேண்டில், 6 ஏர்பேக்குகள், எல்இடி ஹெட் லைட், எல்இடி டெயில் லைட், எல்இடி டிஆர்எல் அம்சங்கள் உள்ளன.
| Curvv | Revotron Turbo Petrol MT | Hyperion GDi MT | Kyrojet Diesel MT |
| Smart | ₹9.99 Lakh | ₹11.49 Lakh | |
| Pure+ | ₹10.99 Lakh | ₹12.49 Lakh | |
| Creative | ₹12.19 Lakh | ₹13.69 Lakh | |
| Creative S | ₹12.69 Lakh | ₹13.99 Lakh | ₹14.19 Lakh |
| Creative+ S | ₹13.69 Lakh | ₹14.99 Lakh | ₹15.19 Lakh |
| Accomplished S | ₹14.69 Lakh | ₹15.99 Lakh | ₹16.19 Lakh |
| Accomplished+ A | ₹17.49 Lakh | ₹17.69 Lakh | |
| Revotron Turbo Petrol DCA | ₹12.49 Lakh | ||
| Hyperion GDi DCA | ₹16.49 Lakh | ||
| Kryojet Diesel DCA | ₹13.99 Lakh | ||
டாடா கார் ஜிடிஐ ஆப்ஷனை பொருத்தவரை அதில் வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் ரூஃப், 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 17 இன்ச் கொண்ட அலாய் வீல்கள், முழு ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் அசிஸ்ட், ஆட்டோ ஹெட்லைட்டுகள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் இந்த கர்வ் காருக்கு அரை நீண்ட நாட்களாக அதன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கூபே ஸ்டைலில் ஒரு காரை வாங்க வேண்டும் என பலர் காத்திருந்த நிலையில், இந்த கார் நிச்சயம் அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது. இதில் கம்பஷன் இன்ஜின் கார் குறைந்த விலையில் அறிமுகமானது. பலருக்கு இது ஜாக்பாட் தான்


Click it and Unblock the Notifications









