உல்லாச கப்பல்கள் தோற்றுப்போகும்... டாடா உருவாக்கியுள்ள காரை பார்த்து வாயடைத்துபோய் நிற்கும் மக்கள்!!
டாடா கர்வ் (Tata Curvv) கார்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமல்லாமல், கர்வ் இவி எலக்ட்ரிக் காரும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு, டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்யப்பட உள்ள டாடா கர்வ் காரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. காரை பற்றிய விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
டாடா கர்வ் ஆனது டாடா மோட்டார்ஸின் கூபே ஸ்டைலிலான எஸ்யூவி கார் ஆகும். கூபே ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், காரின் மேற்கூரையின் பின்பகுதி கூடுதல் சாய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, கர்வ் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரின் முன்பகுதி டாடா ஹெரியர் கார் உடன் பெரிதும் ஒத்துப் போகிறது.

இருப்பினும், நெக்ஸானை காட்டிலும் அளவில் சற்று பெரியதாக கர்வ் உருவாக்கப்பட்டுள்ளது. 18-இன்ச் அலாய் சக்கரங்களுக்கான துளை சதுர வடிவில் வழங்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. காரின் பின்பக்கத்தில் மேற்கூரை உடன் ஸ்பாய்லர் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. சில வருடங்களுக்கு முன் காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட்டில் இந்த ஸ்பாய்லர் இரண்டாக பிளவுப்பட்டதாக வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது சிங்கிள் பீஸாக் வழங்கப்பட்டுள்ளது.
கதவு கைப்பிடிகள் ஃப்ளஷ் டைப்பில் காரின் உடலில் இருந்து தனியாக தெரியாத வகையில் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போலவே, பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்கள் லைட் பார் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. பின்பக்க பூட் கதவை திறக்க/ மூட பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. சைகை மூலமாகவும் இந்த கதவை கண்ட்ரோல் செய்ய முடியும் என டாடா தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட், ப்யூர்+, கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+ எஸ், அக்கம்ப்ளீஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு+ ஏ என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் டாடா கர்வ் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. வெளிப்புற தோற்றத்தை போலவே, கர்வ் காரின் உட்புற தோற்றமும் நிறைய இடங்களில் டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
புதிய கர்வ் காரின் கேபின் பர்கண்டி & கருப்பு என 2 விதமான ட்யூயல்-டோன் நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது. காரின் டேஷ்போர்டு, செண்டர் கன்சோல் மற்றும் 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அனைத்தும் டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி காரில் இருப்பதை போல உள்ளன. 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபுல்-டிஜிட்டல் தரத்தில் டிரைவருக்கான திரை, பனோராமிக் சன்ரூஃப், மடக்கக்கூடிய பின் இருக்கைகள் மற்றும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் உள்ளிட்டவை டாடா கர்வ் காரின் உட்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் ஆகும்.
இவற்றுடன், பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், லெவல்-2 அடாஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அனைத்து 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, ஆட்டோ-ஹோல்ட் வசதி உடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை டாடா கர்வ் காரில் இடம்பெற்றுள்ளன.
டாடா கர்வ் காரை 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது டாடா மோட்டார்ஸின் புத்தம் புதிய 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் என மூன்றில் ஏதேனும் ஒரு என்ஜின் உடன் வாங்கலாம். இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 120 எச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 118 எச்பி வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.
இவற்றுடன், கர்வ் காரில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 1.2 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் 125 எச்பி மற்றும் 225 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இவை மூன்றுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். இதன் மூலமாக, இந்தியாவிலேயே முதல்முறையாக டீசல் என்ஜின் உடன் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கர்வ் காரில் பெற முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் சமீப கால நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் புதிய கர்வ் காரும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஏனெனில், கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்கள் இந்திய மார்க்கெட்டிற்கு புதியது ஆகும். இதன் காரணமாகவே, நிறைய பேர் டாடா கர்வ் காரை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய டாடா காரின் விலை எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்படும் என்பதை அறிய செப்டம்பர் 2 வரையில் காத்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








