இந்தியாவே எதிர்பார்த்த காரின் வருகை மீண்டும் தள்ளி போனது! இது மட்டும் வந்துச்சுன்னா மத்தது எல்லாம் காலி தான்
டாடா நிறுவனம் தனது கர்வ் என்ற புதிய காரை இந்த ஆண்டு முதல் பாதையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இதன் அறிமுகம் இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மென்ட் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முக்கியமாக இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும் பெரும்பாலான ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த செக்மெண்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த செக்மெண்டில் புதிதாக டாடா கர்வ் என்ற காரை இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக இந்த காரின் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். இதன் கான்செப்ட் கார்கள் எல்லாம் ஏற்கனவே ஆட்டோ ஷோகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பாதியிலேயே இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி இந்த கார் அறிமுகம் என்பது சற்று தள்ளிப் போய் உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்காக அறிமுகமாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமே அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதன் பின்பு ஒரு சில மாதங்களில் இதன் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷங்களும் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளன.

முதலில் திட்டமிட்டபடி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த 2024ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே இந்த காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டது. பின்னர் இது முதல் அரையாண்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதையும் விட்டு தள்ளிப் போய் உள்ளது அதன்படி இந்த கார் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன் கார்கள் வரும் செப்டம்பர் மாதம் தயாரிப்பு துவங்கப்பட்டு மார்க்கெட் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் காரின் இவி வெர்ஷனாக மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடித்த நிலையில், தற்போது போட்டி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கி உள்ளன.

அதன்படி ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரித்து வருகிறது. மாருதி நிறுவனம் இ விஎக்ஸ் என்ற காரை தயாரித்து வருகிறது. இந்த காரின் டொயோட்டா வெர்ஷனும் விரைவில் வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக் கார்கள் இந்தியா மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இது வாகன தயாரிப்பு நிறுவனங்களின் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தற்போது டாடா நிறுவனத்தின் கர்வ் கார் அறிமுகம் தள்ளிப்போனதற்கு இந்தியாவில் நடந்துவரும் பொது தேர்தல் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அறிமுகத்தை தள்ளிப் போட்டுள்ளார்கள். அதேநேரம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பை ஸ்திரப்படுத்தவும் ஏற்கனவே தயாரித்த மற்ற தயாரிப்புகளை ஓரளவு விற்பனை செய்துவிட்டு புதிய தயாரிப்புக்கான வெற்றிடத்தை உருவாக்கி அதன் பின்பு அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த தள்ளிப் போடுதலை அந்நிறுவனம் செய்துள்ளது.
டாடா கர்வ் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 125 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களில் இது இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது. டீசல் வேரியன்டை பொறுத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படுகிறது மூன்றாவது டீசல் இன்ஜின் ஆப்ஷன் இதுதான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது கர்வ் எலெக்ட்ரிக் காரை தான் முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் போட்டால் 400 முதல் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









