கார் ரன்னிங்கில் இருப்பதே தெரியாது... டாடா புதுசா உருவாக்கியுள்ள இந்த என்ஜின் உடன் கர்வ் காரை வாங்குங்க!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் கர்வ் இவி எலக்ட்ரிக் காரை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் டாடா கர்வ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜினை கொண்ட டாடா கர்வ் காரின் விலைகள் செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. விலைகள் தவிர்த்து, பெட்ரோல்/ டீசல் என்ஜின் கர்வ் காரின் மற்ற விபரங்கள் அனைத்தையும் கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தின்போது டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுவிட்டது.
கர்வ் காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. இதில் இரு என்ஜின் ஆப்ஷன்கள் ஏற்கனவே டாடா நெக்ஸான் காரில் வழங்கப்படுபவை ஆகும். நெக்ஸானில் இருந்து அவற்றை அப்படியே கர்வ் காருக்கு டாடா வழங்கியுள்ளது. ஆனால் அதேநேரம், கர்வ் காரில் முற்றிலும் புதிய பெட்ரோல் என்ஜின் ஒன்றை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

அதுதான், புதிய ஹைப்பரியன் டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் என்ஜின் ஆகும். கர்வ் காருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் குறித்த விபரங்களை டாடா மோட்டார்ஸ் அதன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பெட்ரோல் என்ஜினை முதல்முறையாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது.
ஹைப்பரியன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பெட்ரோல் என்ஜினை பற்றிய விபரங்கள் டாடா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் தெளிவாகவும், விரிவாகவும் காட்டப்பட்டுள்ளன. இந்த என்ஜினில் மெஷின் லேர்னிங் டெக்னாலஜி உடன் செயல்படக்கூடிய 350 பார் ஃப்யுல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஹைப்பரியன் ஆனது ஒரு டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும்.

இந்த என்ஜின் சிஸ்டத்தில், மாறுப்பட்ட வடிவியலை கொண்ட டர்போசார்ஜர் உள்ளது. இது எலக்ட்ரிக் மூலமாக செயல்படும். காரில் இருந்து வெளிவரும் புகையை கட்டுப்படுத்தும் விதமாக, என்ஜினிற்கு முன்பக்கத்தில் 3-வழி கேட்டலிஸ்ட்டும், பின்பக்கத்தில் 4-வழி கேட்டலிஸ்ட்டும் உள்ளன. அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் என்ஜின் ஆயில் ஹைட்ராலிக் வால்வுகள் மூலமாக இந்த என்ஜினில் சிலிண்டரை வந்தடையும்.
இரும்பிலான ரிங் கேரியரை கொண்டுள்ளதால், இந்த என்ஜின் சிஸ்டத்தில் இருக்கும் பிஸ்டன் உராய்வுகளை நீண்ட காலத்திற்கு தாங்கும். இவற்றுடன், சோடியம் மூலமாக குளிர்விக்கப்படும் எக்ஸாஸ்ட் வால்வுகள் இந்த ஹைப்பரியன் என்ஜின் சிஸ்டத்தில் உள்ளன. இத்தனை டெக்னாலஜிகளை கொண்ட இந்த ஹைப்பரியன் என்ஜின், காரில் மிகவும் மென்மையானதாக இயங்கும் என டாடா வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஹைலைட் படுத்திக் காட்டப்பட்டு இருக்கும் டாடா மோட்டார்ஸின் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-இல் 125 பிஎஸ் மற்றும் 1700- 3500 ஆர்பிஎம்-இல் 225 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டர்போ என்ஜின் இ20 பெட்ரோலில் இயங்கும்.
இந்தியா முழுக்க தற்சமயம் இ20 பெட்ரோல் தான் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. டாடா கர்வ் காரில் இந்த புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர்பாக்ஸை பெறலாம். இந்த புதிய என்ஜினை எடை குறைவான அலுமினியத்தில் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் காரை தனியாக ஹைலைட் படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக இந்த புதிய டர்போ பெட்ரோல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதில் இருந்து, புதிய கர்வ் எஸ்யூவி காருக்கு டாடா நிறுவனம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









