போட்றா வெடிய... இந்தியாவே தவம் கிடக்கும் டாடா கார் 7ம் தேதி அறிமுகம்... சந்தோஷத்துல கையும் ஓடல காலும் ஓடல...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 மாடல்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நீண்ட காலமாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், டாடா கர்வ் காரின் டீசர் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளியாகி வந்தன. டாடா கர்வ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் நெருங்கி வருவதை இது உணர்த்தியது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், டாடா கர்வ் காரின் அறிமுக தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டாடா கர்வ் கார் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் டாடா கர்வ் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 மாடல்களுமே அறிமுகம் செய்யப்படவுள்ளன. எனவே வரும் ஆகஸ்ட் 7ம் தேதி டாடா கர்வ் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய 2 மாடல்களை பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் நமக்கு தெரியவந்து விடும்.

Tata Curvv

ஆனால் இந்த 2 மாடல்களின் விலைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அன்றைய தினமே அறிவித்து விடுமா? அல்லது ஒரு சில நாட்கள் கழித்து அறிவிக்குமா? என்பது தற்போதைய நிலையில் உறுதியாக தெரியவில்லை. டாடா கர்வ் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய 2 மாடல்களிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் என ஏராளமான வசதிகளை டாடா கர்வ் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

Tata Curvv EV

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசி இன்ஜின் மாடலை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் மாடலை பொறுத்தவரையில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 500 கிலோ மீட்டர் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா கர்வ் காரானது, எஸ்யூவி கூபே (SUV Coupe) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கவுள்ளதால், டாடா கர்வ் கார் விற்பனையில் சாதனை படைக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், டாடா கர்வ் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில் கர்வ் கார் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2024, 20:25 [IST]
English summary
Tata curvv official launch date august 7 full details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+