இன்னும் ரெண்டே நாள்தான்... ஒட்டுமொத்த தேசமும் காத்து கிடக்கும் டாடா கார் களமிறங்க போகுது... எத்தன நாள் தவம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இந்த கார் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் விலை அறிவிக்கப்படுமா? என்பதில் குழப்பம் நிலவி கொண்டிருந்தது. அந்த குழப்பம் தற்போது நிவர்த்தியாகியுள்ளது. ஆம், வரும் ஆகஸ்ட் 7ம் தேதி டாடா கர்வ் காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

டாடா கர்வ் கார் வரும் ஜூலை 19ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அன்றைய தினம் டாடா கர்வ் காரின் டிசைன், வசதிகள் மற்றும் செயல்திறன் பற்றிய விபரங்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து விலை எவ்வளவு? என்பது வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அறிவிக்கப்படும்.

Tata Curvv

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா கர்வ் காரானது, எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் என 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. எனவே டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது ஆகஸ்ட் 7ம் தேதி நமக்கு தெரிந்து விடும்.

இதற்கு அடுத்தபடியாக டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. எனவே இதன் விலை எவ்வளவு? என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள நாம் இன்னும் சிறிய காலம் காத்திருக்க வேண்டும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொதுவாக ஒரு காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும்.

Tata Curvv EV

அதற்கு பிறகுதான் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும். ஆனால் இனிமேல் ஒரு காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பிறகுதான் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு களமிறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா கர்வ் காரின் வசதிகளை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் என 2 மாடல்களிலும், எலெக்ட்ரின் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு ஆகிய அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 56kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாக இருக்கலாம். இதன் டிரைவிங் ரேஞ்ச் 550 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்றொரு பேட்டரி ஆப்ஷன் குறித்த உறுதியான தகவல் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஐசி இன்ஜின் மாடலை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா கர்வ் இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் ஒன்று. எனவே விலை நிர்ணயம் மட்டும் சரியாக இருந்து விட்டால், இது நிச்சயமாக விற்பனையில் சாதனை படைக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 16, 2024, 22:44 [IST]
English summary
Tata curvv official unveil date july 19 full details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+