மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் டாடா காருக்கு சவால்விடும் புதிய கார் - தீபாவளிக்கு ரெடியா இருங்க!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் விற்பனைக்குவர இருக்கும் கார், கர்வ் (Currv) ஆகும். வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி டாடா கர்வ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, காரின் விலை தவிர்த்து மற்ற அனைத்து விபரங்களும் அன்றைய தினத்தில் வெளியாகிவிடும். டாடா மோட்டார்ஸில் இருந்து சமீப காலத்தில் மார்க்கெட்டுக்கு வந்த நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்ட கார்களின் வரிசையில் கர்வ் மாடலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா கர்வ் காருக்கு விற்பனையில் போட்டியளிக்கும் விதமாக பல்வேறு புதிய எஸ்யூவி கார்கள் மற்ற பிராண்ட்களில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் ஒன்று, சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) ஆகும். பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் நிறுவனத்தில் இருந்து புதிய கூபே-ஸ்டைல் எஸ்யூவி ரக காராக பசால்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சி5 ஏர்கிராஸ், சி3, இசி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் என 4 விதமான கார்களை இந்தியாவில் விற்பனை செய்யும் சிட்ரோன் அதன் 5வது காராக பசால்ட்டை இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், வருகிற தீபாவளி சமயத்தில் சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்படலாம். இந்த நிலையில், பசால்ட் கார் ஒன்று இந்தியாவில் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில், சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் பசால்ட் கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் இருப்பதை காண முடிகிறது. பொதுவாக, இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கப்படும் கார்கள் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டு விட்டதால், சில பாகங்களை மட்டும் மறைத்து பசால்ட் காரை இந்த சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் உட்படுத்தி உள்ளது.

இதனால், காரின் பெரும்பாலான பாகங்களை நம்மால் தெளிவாக காண முடிகிறது. இருப்பினும், இந்த படங்கள் காரின் பின்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதால், காரின் முன்பக்கத்தை காண முடியவில்லை. சிட்ரோன் பசால்ட் காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர் ஆனது காருடன் ஒருங்கிணைத்து வழங்கப்பட உள்ளது. பின்பக்க பம்பர் க்ரோம் கார்னிஷ் உடன் உள்ளது. அதேபோல், பின்பக்க பம்பரில் ஒளி எதிரொலிப்பான்களை காண முடிகிறது.
சிட்ரோன் பசால்ட் காரை பற்றிய விபரங்கள் கடந்த மார்ச் மாதத்தில் படங்களுடன் வெளியிடப்பட்டன. அப்போது எந்த மாதிரியான டெயில்லைட்களை கொண்டிருந்ததோ கிட்டத்தட்ட அதே போன்றதான டெயில்லைட்களையே இந்த சோதனை ஓட்ட பசால்ட் காரும் கொண்டுள்ளது. மேலும், இந்த கார் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவை கொண்டிருப்பதையும் ஸ்பை படங்களில் காண முடிகிறது.

கருப்பு நிறத்தில் உள்ள காரின் மேற்கூரைக்கு கீழே சிறிய அளவிலான லைட் உள்ளது. இது இண்டிகேட்டராக இருக்கலாம். கூபே-ஸ்டைல் கார்களில் மேற்கூரை ஆனது பின்பக்கத்தில் சறுகலாக வழங்கப்படுவது வழக்கம். இந்த சிட்ரோன் பசால்ட் காரிலும் மேற்கூரை பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக உள்ளது. காரின் மேற்கூரையை போலவே, ஜன்னல் லைன்கள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளும் கருப்பு நிறத்தில் உள்ளன.
அலாய் சக்கரங்களின் டிசைன் ஆனது வழக்கமாக சிட்ரோன் கார்களில் இருப்பதை போலவே இந்த பசால்ட் காரிலும் உள்ளது. சிட்ரோன் சி3 மற்றும் சி3 ஏர்கிராஸை போலவே அதே யுக்தியை பயன்படுத்தி பசால்ட் காரை சிட்ரோன் உருவாக்கி உள்ளது. இதனால், சி3 காரில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தான் இந்த காரிலும் பொருத்தப்படும். 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த சிட்ரோன் காருக்கு உள்ளே விசாலான கேபினை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிட்ரோன் பசால்ட் காரின் முன்பக்கம் மட்டுமின்றி தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் காரின் உட்புறத்தையும் காண முடியவில்லை. கூபே டிசைனிலான வெளிப்புற தோற்றத்தை தவிர்த்து, மற்ற சிட்ரோன் கார்களை போலவே புதிய பசால்ட் மாடலும் இருக்கும். ஏனெனில், அப்போதுதான், சிட்ரோன் நிறுவனத்துக்கு உற்பத்தி செலவு குறைவாக இருக்கும்.
Image Courtesy: PoNsam ChaRles


Click it and Unblock the Notifications









