புது டாடா கார் சாலையில் பார்க்கும்போது பயங்கரமா இருக்கு... புக் பண்ணா அடுத்த நாளே டெலிவிரி பண்ணிடுவாங்க போல!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்வ் (Curvv) எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாளை (ஆகஸ்ட் 7) அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா கர்வ் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை சென்றடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டீலர்ஷிப் ஷோரூமுக்கு டாடா கர்வ் ஒன்று மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

நெக்ஸான், பஞ்ச் கார்களின் வெற்றியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கும் புதிய எஸ்யூவி கார் கர்வ் ஆகும். கூபே ஸ்டைலிலான எஸ்யூவி கார் என்பதால், மற்ற எஸ்யூவி கார்களில் இருந்து டாடா கர்வ் தோற்றத்தில் சற்று வித்தியாசமாக உள்ளது. கர்வ் காரை பற்றிய விபரங்களை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. இன்னும் விலைகளை அறிவிப்பது மட்டுமே பாக்கி.

tata curvv reaching dealership showrooms

கர்வ் காரின் விலைகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த காரின் அறிமுகத்திற்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில், டாடா கர்வ் கார்களை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள படத்தில், வெள்ளை நிற மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் டாடா கர்வ் ஒன்று சாலையில் கொண்டு செல்லப்படுவதை காணலாம்.

பொதுவாக, இவ்வாறு கொண்டு செல்லப்படும் கார்களில் சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருப்பது வழக்கம். ஆனால், இந்த குறிப்பிட்ட கர்வ் காரில் அவ்வாறான நம்பர் பிளேட் எதுவும் இல்லை. இந்த படத்தில், டாடா கர்வ் காரின் பின்பக்கத்தை மட்டுமே நம்மால் காண முடிகிறது. காரின் பின்பக்கத்தில், எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் விதத்தில் காரின் முழு அகலத்திற்கு சிவப்பு நிற லைட் பார் இருப்பதை காணலாம்.

tata curvv reaching dealership showrooms

மேலும், காரின் பின்பக்கத்தில் சில்வர் நிறத்தில் ஸ்கிட் பிளேட் மற்றும் சரிவான மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லரையும் பார்க்க முடிகிறது. அலாய் சக்கரங்கள் ஸ்டைலிஷான தோற்றத்தில் உள்ளன. சக்கரங்கள் சுழல்வதற்கு போதுமான இடவசதிக்காக சதுர வடிவில் வீல் ஆர்ச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.

வெளிப்புறத்திற்கு ஏற்ப, புதிய கர்வ் காரின் உட்புறமும் மாடர்னான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காருக்கு உள்ளே டேஷ்போர்டில் பெரிய அளவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தில் ஒளிரக்கூடிய டாடா லோகோ, புதிய HVAC கண்ட்ரோல் பேனல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கர்வ் காரை பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் அதாவது கர்வ் இவி எலக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படத்தில் காட்சி தருவது கர்வ் இவி எலக்ட்ரிக் காரா என்பது தெரியவில்லை. டாடா கர்வ் காரில் வழங்கப்பட உள்ள என்ஜின் ஆப்ஷன்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

டாடா நெக்ஸானில் வழங்கப்படும் 3 என்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே டாடா கர்வ் காரிலும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் கர்வ் காரில் வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் அடுத்த வெற்றிக்கரமான கார் கர்வ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விலையை மட்டும் டாடா குறைவாக நிர்ணயித்தால் கர்வ் கார்களின் விற்பனை ஆரம்பத்தில் இருந்தே வேகமெடுக்கும். இத்தகைய கார் இப்போதே டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்டதால், டாடா கர்வ் கார்களின் டெலிவிரிகளை விரைவாக எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2024, 8:00 [IST]
English summary
Tata curvv spotted while reaching dealership showrooms check all details here
மேலும்... #tata motors #Tata Curvv EV #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+