பணக்காரங்க மட்டும் தான் யூஸ் பண்ண முடியும்னு நினைச்சதை, டாடா மிடில் கிளாஸ் மக்களையும் யூஸ் பண்ண வைக்க போறாங்க
டாடா நிறுவனம் தனது கர்வ் என்ற எஸ்யூவி காரை வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த கார் இந்தியாவில் புதிய எஸ்யூவி கூபே செக்மென்ட் காராக விற்பனைக்கு வரப்போகிறது. பொதுவாக பார்த்தால் இது சி-செக்மென்ட் காராகும். இந்த செக்மெண்ட் கார்களிலேயே இல்லாத மூன்று அம்சம் இந்த காரில் இருக்கிறது. இந்த அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
டாடா நிறுவனம் தனது கர்வ் காரை இந்தியாவில் நீண்ட எதிர்பார்ப்புக்கிடையில் களமிறக்குகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இந்த கார் களமிறங்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இது எப்படி வேலை செய்கிறது இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும் என்று பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கார் விற்பனைக்கு வர போகும் சி-செக்மெண்டிலேயே மற்ற எந்த காரிலும் இல்லாத மூன்று அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. அதாவது இந்த காரில் பிளாஷ் டோர் ஹேண்டில், பவர் டெயில் கேட் மற்றும் ஃபுல் மேப் அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இது மிக முக்கியமான அம்சமாக இருக்கும் பெரிய சொகுசு கார்களில் தான் இப்படியான அம்சங்கள் இருந்தன. தற்போது பட்ஜெட் காரிலும் இந்த அம்சங்கள் இருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. பணக்காரர்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்த அம்சங்களை இனி மிடில் கிளாஸ் மக்களும் பயன்படுத்தலாம். இது குறித்த விரிவான தகவல் காண்போம்.

முதலில் ஃபிளாஷ் டோர் ஹேண்டில் உடன் விற்பனைக்கு வரும் காராக இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இருக்கிறது என்றாலும் அது டி செக்மென்ட் காராகும். இந்த கார் தான் குறைந்த விலையில் மேனுவல் பிளாஷ் டோர் கொண்ட காராக விற்பனைக்கு வருகிறது. ஆட்டோமேட்டிக் ஃபிளாஷ் டோர் அம்சமும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இது மட்டுமல்லாமல் இந்த காரையும் டாப் வேரியண்டில் ஸ்டேரிங் கண்ட்ரோல் டச் மவுண்ட் அம்சத்துடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இந்த செக்மெண்டில் முதல் காரில் வரும் அம்சம்தான். இந்த செக்மெண்டில் உள்ள மற்றும் கார்களில் இப்படியான அம்சம் எதுவும் கிடையாது. நீங்கள் செல்லும்போது ஸ்டீரிங்கில் பட்டனை அழுத்த தேவையில்லை. டச்சு செய்தாலே கண்ட்ரோல் பட்டன்கள் ஒர்க் ஆகும்.

அடுத்த முக்கியமான அம்சமாக எலெக்ட்ரிக் டெயில் கேட் அம்சம் இருக்கிறது. டாடா நிறுவனத்தின் சஃபாரி காரில் ஏற்கனவே இந்த அம்சம் இருக்கிறது. ஆனால் அது டி-செக்மெண்ட் காராகவும் வேறு எந்த காரிலும் இந்த அம்சம் கிடையாது. காரில் உள்ள பயணிகள் வசதிக்காக இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பொருத்தப்பட்ட குறைந்த விலை காராக இது தான் இருக்கும்.
இந்த அம்சம் என்னவென்றால் நீங்கள் காரின் பின்பக்க கதவை திறப்பதற்காக பட்டனையோ அல்லது கையையோ பயன்படுத்த தேவையில்லை. காருக்கு அடியில் இருக்கும் சென்சாரை பயன்படுத்தி காரின் கதவை உங்களால் திறக்க முடியும் கையில் பொருட்களை ஏந்தி வரும் நீங்கள் உங்கள் காலை காருக்கு அடியில் நீட்டினாலே ஆட்டோமேட்டிக்காக பின்பக்க கதவு திறக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
காரில் அடிக்கடி ஷாப்பிங் செல்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் உதவியாக இருக்கும் குறிப்பாக பெண்கள் இதை அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் தான் அதிக அளவில் ஷாப்பிங் செல்கிறார்கள் என்பதால் அவர்கள் இந்த காரை வாங்கினால் இந்த அம்சம் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
அடுத்ததாக இருக்கும் ஆப்ஷன் ஃபுல் மேப் வியூ ஆப்ஷன் தான். இந்த டாடா கர்வ் காரில் 10.25 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் தான். இதே கருவி நெக்ஸான் எஸ்யூவி காரிலும் இருக்கிறது. பொதுவாக இன்ஃபோடைமென்ட் சிஸ்டத்தில் தான் மேப்பை ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்டு மூலம் இணைப்பார்கள்.
ஆனால் இந்த காரில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிரைவருக்கு நன்றாக தெரியும் வகையில் முழு ஸ்கிரீனில் மேப் டிஸ்ப்ளே ஆகும். அந்த நேரத்தில் இன்ஃபோடைமென்ட் சிஸ்டத்தை வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது மேப் பயன்படுத்தும் போது வேறு பயன்பாடு பயன்படுத்த முடியாத அளவுக்கு இன்போடெயின்மென்ட் சிஸ்டம் அடைப்பதால் இந்த அம்சத்தை நிறுவனம் தனது கர்வ் காரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் மேலே சொன்ன அம்சங்கள் எல்லாம் இதுவரை சொகுசு கார்களில் மட்டுமே இருந்தன. அதிக விலை கொடுத்து வாங்கும் கார்களில் மட்டுமே இந்த அம்சங்களை எல்லாம் அனுபவிக்க முடியும் என்ற சூழ்நிலையை மாற்றி டாடா நிறுவனம் இனி மிடில் கிளாஸ் மக்களும் இப்படியான அம்சங்களை அனுபவிக்கலாம் என்ற ரீதியில் இந்த அம்சத்தை தனது புதிய காரில் கொடுத்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது.


Click it and Unblock the Notifications









