பிரெஞ்சு நிறுவனத்தின் கார் அளவுக்கு ரேட் கம்மி இல்ல.. டாடா கர்வ் vs சிட்ரோன் பசால்ட் விலை ஒப்பீட்டு தகவல்!..

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்வ் கூபே எஸ்யூவி (Coupe SUV) ரக காரின் விலையை இன்று (செப்டம்பர் 02) அறிவித்திருக்கின்றது. இந்த காரின் வருகை பிரபல பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen)-இன், சமீபத்திய அறிமுகமான பசால்ட் கூபே எஸ்யூவி-க்கே மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது. டாடா கர்வ் வருகைக்கு முன்னர் வரை இந்த காருக்கு எந்தவொரு போட்டியும் இல்லாத நிலையே இந்தியாவில் தென்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே, கடந்த ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி அன்று கர்வ் காரை அதிகாரப்பூர்வமாக டாடா வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்தே இந்த காரின் விலை இன்று அறிவித்திருக்கின்றது. இதன் விலையையும், சிட்ரோன் பசால்ட் காரின் விலையையும் ஒப்பீடு செய்த தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tata curvv vs citroen basalt

டாடா கர்வ் கூபே எஸ்யூவி காரின் விலை விபரம்: டாடா மோட்டார்ஸ் இந்த புதுமுக காருக்கு ரூ. 9.99 லட்சம் தொடங்கி ரூ. 17.69 லட்சம் என்கிற விலையையே நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது அறிமுக சிறப்பு விலை மட்டுமே என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. விரைவில் இந்த விலைகள் உயர்த்தப்பபட இருக்கின்றன. அக்டோபர் 31 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை விலையில் கர்வ் விற்பனைக்குக் கிடைக்கும்.

சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி காரின் விலை விபரம்: இந்த காருக்கு மிகவும் குறைவான விலையே சிட்ரோன் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ. 7.99 லட்சம் தொடங்கி ரூ. 13.62 லட்சம் வரையிலான விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுக சலுகை விலை அல்ல.

வழக்கமான விலையே என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், டாடா கர்வ்-வைவிட மிக மிக குறைவான விலையிலேயே சிட்ரோன் பசால்ட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்த காருக்கான மிகப் பெரிய பிளஸ்ஸாகும். ஆகையால், விலை விஷயத்தில் இந்த கார் கர்வ்-க்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்பது தெரிகின்றது.

டாடா கர்வ் எஞ்சின் தேர்வு மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்: டாடா கர்வ் காரில் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகின்றது. அதில் இரண்டு பெட்ரோல் மோட்டார், ஒன்று டீசல் எஞ்சின் ஆகும். முதலில் இருப்பது 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் மோட்டார் ஆகும்.

இதற்கு அடுத்ததாக இருப்பது 123 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் ஹைபரியன் பெட்ரோல் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இது நிறுவனத்தின் புத்தம் புதிய எஞ்சின் ஆகும். இவற்றுடனேயே ஓர் டீசல் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது.

1.5 லிட்டர் டீசல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது 116 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றையும் டாடா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதிக் கொண்ட ரூஃப் கர்வ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 10.25 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல்கள், முழு ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் அசிஸ்ட், ஆட்டோ ஹெட்லைட், மழை வந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

சிட்ரோன் பசால்ட் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் எஞ்சின் விபரங்கள்: டாடா கர்வ் காரை போலவே இதிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், கிளைமேட் கன்ட்ரோல், அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பின் பக்க இருக்கை, எல்இடி ஹெட்லைட், ஆர்ம் ரெஸ்ட் (ஸ்டோரேஜ் வசதியுடன்), ஆறு ஏர் பேக்குகள், ஆம்பியன்ட் லைட், சன்ரூஃப், வெண்டிலேட் வசதி கொண்ட இருக்கை என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 82 எச்பி மற்றும் 115 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 110 எச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. இதில், டீசல் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது பசால்ட் காரில் உள்ள ஓர் குறையாகப் பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், டீசல் கார்களுக்கு எதிரான நடவடிக்கை இந்தியாவில் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதானலேயே இதற்கு சிட்ரோன் ஆர்வம் காட்டவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், டீசல் எஞ்சின் கடுமையான விதிகள் காரணமாக மிக விலையுயர்ந்ததாக மாறியிருக்கின்றன. இது இந்தியாவில் பெரிய வேலைக்கு ஆகாது என்கிற மனநிலையே சிட்ரோன் பசால்ட்-இல் டீசல் எஞ்சினை தவிர்க்க முக்கிய காரணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2024, 23:00 [IST]
English summary
Tata curvv vs citroen basalt price comparison
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+