இன்னும் கொஞ்ச நாளில் ரோடு முழுக்க ஓடவுள்ள புது டாடா கார்கள்!! இன்ஜினை தேர்வு செய்வதில் பெரிய குழப்பம் வரும்...

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். குறிப்பாக, சமீப காலத்தில் நெக்ஸான், பஞ்ச் என வெற்றிக்கரமான கார்களை விற்பனைக்கு கொண்டுவந்து இந்திய கார்கள் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில், டாடா நிறுவனம் அடுத்ததாக களமிறக்கவுள்ள கார் கர்வ் (Curvv) ஆகும். கூபே ஸ்டைலிலான எஸ்யூவி காராக கர்வ் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, காரின் பின்பக்க மேற்கூரை சாய்வாக இருக்கும். இதன் காரணமாகவே இந்த காரின் அறிமுகம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. டாடா கர்வ் காரின் அறிமுகம் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நெக்ஸான், பஞ்ச் கார்களை போன்று கர்வ் காரையும் பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. டாடா கர்வ் மற்றும் கர்வ் இவி இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

tata curvv vs curvv ev

தோற்றம்: டாடா கர்வ் காரின் தோற்றம் ஆனது மிகவும் மாடர்ன் தரத்திலானது ஆகும். கர்வ் மற்றும் கர்வ் இவி இவை இரண்டிலும் பெரும்பான்மையான பாகங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இரு கார்களிலும் எல்இடி ஹெட்லைட்களை இணைக்கும் விதத்தில் எல்இடி டிஆர்எல்-கள் கொடுக்கப்பட உள்ளன. எலக்ட்ரிக் கார் என்பதால், கர்வ் இவி காரில் க்ரில் பகுதி மூடப்பட்டதாக வழங்கப்படும்.

அதேபோல், தடையற்ற பயணத்திற்கேற்ப ஆக்டிவ் அலாய் சக்கரங்கள் உடன் கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்பக்க தோற்றத்தில் கர்வ் மற்றும் கர்வ் இவி இரண்டும் ஒரே மாதிரி ஆனவைகளாகவே இருக்கும். பின்பக்க ஸ்பாய்லரின் வடிவத்தில் கூட மாற்றம் இருக்காது. மேற்கூரையின் டிசைன் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எலக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் விதத்தில் கர்வ் இவி காரில் 'இவி' பேட்ஜ் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்டிரெயின்: டாடா கர்வ் காரில் வழங்கப்பட உள்ள என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் குறித்த விபரங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகத்தின்போதே வெளியிடப்பட உள்ளன. டாடா கர்வ் காரில் எங்களுக்கு தெரிந்தவரையில், நெக்ஸானில் வழங்கப்படும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

நெக்ஸானின் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது கர்வ் காருக்காக அதிகப்பட்சமாக 125 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக மேம்படுத்தப்படலாம். இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். கர்வ் இவி-ஐ பொறுத்தவரையில், 2ஆம் ஜென்ரேஷன் ஆக்டி.இவி ஆர்ச்சிடெக்சரை கொண்டதாக இந்த எலக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது.

மற்றப்படி, எந்த மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி உடன் கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது தெரியவில்லை. நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் அதே எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி புதிய கர்வ் இவி மாடலிலும் வழங்கப்படலாம். நெக்ஸான் இவி காரை காட்டிலும் கர்வ் இவி அளவில் சற்று பெரியதாக இருப்பினும், இரண்டிலும் கிடைக்கும் இயக்க ஆற்றலில் பெரியதாக எந்த வேறுப்பாடும் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம்.

தொழிற்நுட்ப அம்சங்கள்: கர்வ் மற்றும் கர்வ் இவி இவை இரண்டிலும் 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பனோராமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஏசி, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஒளிரக்கூடிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே மாதிரியாக வழங்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்டுள்ள விபரங்கள் யாவும் டாடா மோட்டார்ஸ் வழங்கி உள்ளவையே ஆகும். கர்வ் மற்றும் கர்வ் இவி இவை இரண்டையும் நெருக்கமாக பார்த்தால்தான், இவை இரண்டில் எதன் தோற்றம் சிறப்பாக உள்ளது என்பதையும், ஓட்டிப் பார்த்தால்தான் இவற்றின் டிரைவிங் கண்ட்ரோலையும் ஒப்பீடு செய்ய முடியும். அதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த புதிய டாடா கார்களின் அறிமுகம் வரையில் காத்திருப்பதை தவிர்த்து வேறு வழியில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 8:00 [IST]
English summary
Tata curvv vs curvv ev electric car comparison check all details here
மேலும்... #tata motors #car comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+