டாடாவின் எலெக்ட்ரிக் காரை வாங்கப்போறீங்களா? உடனே ஷோரூம்க்கு ஓடுங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், தற்போது புதிதாக எலெக்ட்ரிக் காரை வாங்க நினைப்பவர் நினைத்தவுடன் ஷோரூமிற்கு சென்று காரை வாங்க முடியாது. அவருக்கு சராசரியாக இரண்டு மாதம் வரை காத்திருப்பு காலம் என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

அப்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையின் காலம் மாறிக்கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பல பிரதான கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருவதால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகி வருகிறது.

tata electric car waiting period

தற்போது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் எலெக்ட்ரிக் காராக நான்கு கார்கள் விற்பனையாகி வருகின்றன. டாடா டியாகோ இவி, டாடா டிகோர் இவி, டாடா பஞ்ச் இவி ஆகிய கார்கள் விற்பனையாகி வரும் நிலையில், இந்த கார்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இந்த காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஷோரூமிற்கு சென்று காரை வாங்க முடியும்.

ஷோரூமில் பெரும்பாலான இவி கார்கள் ஸ்டாக்கில் இருந்த நிலையில் தற்போது அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது காரணமாக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு காத்திருப்பு காலத்தை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று நீங்கள் எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என டாடா ஷோரூமிற்க்கு சென்றால் நீங்கள் புக் செய்து சராசரியாக இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

tata electric car waiting period

ஒவ்வொரு நகரங்களுக்கும் இந்த காத்திருப்பு காலம் என்பது மாறுபடுகிறது. சென்னையை பொருத்தவரை டாடா டியாகோ இவி காருக்கு இரண்டு மாதங்களும் டாடா டிகோர் இவி காருக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களும், டாடா பஞ்ச் இவி காருக்கு இரண்டு மாதமும் டாடா நெக்ஸான் இவி காருக்கு இரண்டு மாதமும் காத்திருப்பு காலமாக இருக்கிறது.

காத்திருப்பு காலம் என்பது ஒவ்வொரு ஷோரூமிற்கும் மாறுபடும். குறிப்பிட்ட ஷோரூமில் ஸ்டாக் இருந்தால் நீங்கள் உடனடியாக கூட அந்த வாகனத்தை வாங்க வாய்ப்புள்ளது. அதே நேரம் ஸ்டாக் இல்லை என்றால் நிச்சயம் நீங்கள் காத்திருப்பு காலத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது. டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை அதிகப்படுத்தினால் மட்டுமே இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க முடியும்.

பொதுவாக டாடா நிறுவனத்தின் கார்களுக்கு பெரிய அளவில் காத்திருப்பு காலங்கள் இருக்காது. டாடா மாருதி போன்ற நிறுவனங்கள் எல்லாம் அதிக அளவிலான வாகனங்களை உற்பத்தி செய்து வருவதால் குறைவான காத்திருப்பு காலத்திலேயே வாகனங்களை டெலிவரி செய்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் டாடா நிறுவனம் குறைந்த அளவிலான உற்பத்தியை செய்து வருகிறது.

தற்போது பெருகிவரும் டிமாண்ட் இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால் டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும். இந்த நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் காத்திருப்பு காலம் என்பது குறைந்து விற்பனை என்பது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை எல்லாம் அப்டேட் செய்தது. கடந்த 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில கார்கள் டாடா மோட்டார் ஷோரூமில் இன்னும் விற்பனையாகாமல் இருக்கிறது. இந்த கார்களை எல்லாம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமான தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்பினால் தற்போது புக்கிங் செய்து விடுங்கள். அப்பொழுதுதான் குறைந்தபட்சம் இரண்டு மாதத்திற்கு பிறகாவது உங்களுக்கு கார் என்பது கிடைக்கும். இல்லை என்றால் அடுத்த சில மாதங்களில் இந்த காத்திருப்பு காலம் அதிகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 7:00 [IST]
English summary
Tata electric car waiting period march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X