கூட்டணி வைத்த டாடா - பஜாஜ்! செல்போனை, ஏசி-யை வாங்குறத போல டாடா கார்களை ஓட்டி போகலாம்!

இந்திய நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), பஜாஜ் உடன் கை கோர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு நிறுவனங்களும் இணைந்ததற்கான காரணம் என்ன? இந்த இணைவின் வாயிலாக இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கும் பலன் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா மோட்டார்ஸ் தன்னுடைய பயணிகள் வாகன (Passenger Vehicles) பிரிவும், பயணிகள் எலெக்ட்ரிக் கார்கள் (Passenger Electric Mobility) பிரிவும் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj FinServ) உடனேயே அது தன்னுடையை கூட்டணியை மேற்கொண்டு இருக்கின்றது.

Tata motors partners with bajaj finance

வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக நிதி கிடைத்திடும் பொருட்டு இந்த கூட்டணியை அது தொடங்கி இருக்கின்றது. ஆமாங்க, வாடிக்கையாளர்கள் மிக சுலபமாகவும், குறைவான வட்டியிலும் தன்னுடைய எலெக்ட்ரிக், சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை வாங்கும் பொருட்டே இந்த இணைவு பணியை அது செய்திருக்கின்றது.

எனவே இனி டிவி, செல்போன்களை போல டாடா மோட்டார்ஸ் ஷோரூமிற்கு சென்று, பஜாஜ் ஃபைனான்ஸ் வாயிலாக டாடா கார்களையும் வாங்கிக் கொள்ள முடியும். டாடா மோட்டார்ஸ் இப்போதைய நிலவரப்படி, டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), பஞ்ச் (Punch), நெக்ஸான் (Nexon), ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய கார் மாடல்களையே இந்திய சந்தயைில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில், டியாகோ, டிகோர், பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய கார் மாடல்களில் ஐசிஇ ஆப்ஷன்களுடன் சேர்த்து எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இந்த மின்சார கார்களையும் பஜாஜ் ஃபைனான்ஸ் வாயிலாக இனி வாங்கிக் கொள்ள முடியும். இதில் டியாகோ இவி-யே நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கின்றது. ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதேவேளையில், நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக பஞ்ச்.இவி இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 14.49 லட்சம் ஆகும். இந்த விலைகள் அனைத்தம் எக்ஸ்-ஷோரூம்கள் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து கார்களையும் பஜாஜ் ஃபைனான்ஸ் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

சற்று குறைவான வட்டியில், உடனடி லோன்களை இந்த கார்களுக்கு பஜாஜ் வழங்க இருக்கின்றது. குறிப்பிட்ட சில தகுதிகளைப் பெற்றிருந்தாலே கார் கடன் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி-யும், அதிகம் விற்பனையாகும் ஐசிஇ கார் மடலாக பஞ்ச் மற்றும் நெக்ஸான்-ம் இருக்கின்றன.

இந்த கார் மாடல்களின் சேல்ஸ் வரும் நாட்களில் இன்னும் அபரீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக கடன் கிடைக்கும் பொருட்டு நிதி நிறுவனங்களுடன் இணைவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று பல நிறுவனங்களுடன் அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது புதிய நிதி நிறுவனமாக பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் அதை கை கோர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவின் மின்சார கார்கள் பிரிவில் இதுவே தலைவனாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இது டாடா கார்களின் விற்பனைக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 22:45 [IST]
English summary
Tata joins hands with bajaj finance service
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+