குறைவான விலையில் ஏஎம்டி காரை வாங்கணுமா? இதோ டாடா நெக்ஸான் மாடலில் புதிய மலிவு விலை ஏஎம்டி தேர்வுகள் அறிமுகம்!

இந்தியர்கள் மத்தியில் ஏஎம்டி (AMT) எனப்படும் ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Automated Manual Transmission) அம்சம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்த அம்சம் கொண்ட நெக்ஸானின் மலிவு விலை தேர்வுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

சமீபத்திலேயே டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் எஸ்யூவி-யின் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon Facelift) வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அரங்கேறியது. இந்த நிலையிலேயே புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட தேர்வுகள் விற்பனைக்கு இணைக்கப்பட்டு இருக்கின்றன.

Tata launches affordable amt nexon

ஸ்மார்ட் பிளஸ் (Smart Plus), ப்யூர் (Pure), ப்யூர் எஸ் (Pure S) ஆகிய பெட்ரோல் ஆப்ஷன்களிலும், ப்யூர் (Pure) மற்றும் ப்யூர் எஸ் (Pure S) ஆகிய டீசல் ஆப்ஷன்களில் என ஒட்டுமொத்தமாக ஐந்து புதிய தேர்வுகளிலேயே ஏஎம்டி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ரூ. 10 லட்சம் ஸ்மார்ட் பிளஸ் ஏஎம்டி பெட்ரோல் தேர்விற்கும், ப்யூர் ஏஎம்டி பெட்ரோல் தேர்விற்கு ரூ. 10.50 லட்சமும், ப்யூர் எஸ் ஏஎம்டி பெட்ரோல் தேர்விற்கு ரூ. 11 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்ப்டடு இருக்கின்றது. இதேபோல், ப்யூர் ஏஎம்டி டீசல் தேர்விற்கு ரூ. 11.80 லட்சமும் மற்றும் ப்யூர் எஸ் ஏஎம்டி டீசல் ஆப்ஷனுக்கு ரூ. 12.30 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த விலைகள் முன்பு விற்பனைக்கு கிடைத்த ஏஎம்டி தேர்வுகளைக் காட்டிலும் ரூ. 1.70 லட்சம் - ரூ. 1.20 லட்சம் வரையிலான குறைவான விலை ஆகும். சற்று குறைவான விலையில் ஏஎம்டி ஆப்ஷனை தேர்வை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பயன்பெறும் விதமாக இந்த விலை குறைவான ஏஎம்டி தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி பெட்ரோல் ஆப்ஷன்கள் அனைத்திலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதேபோல், நெக்ஸான் ஏஎம்டி டீசல் தேர்வில் 1.5 லிட்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. டீசல் ஏஎம்டி வசதிக் கொண்ட நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 24.01 கிமீ வரையிலும், டீசல் மேனுவல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 23.23 கிமீ மைலேஜையும் வழங்கும்.

இதேபோல், பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் நெக்ஸான் 17.44 கிமீ வரையிலும் மைலேஜை தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்தியாவின் மிகவும் அதிக பாதுகாப்பான திறன் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் எஸ்யூவி இருக்கின்றது.

இந்த விஷயத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த கார் மாடலில் ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர்கள் இருக்கை ஆங்கர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், நவீன கால தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் எக்கச்சக்கமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதி உடனும், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் மியூசிக் சிஸ்டமும், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், கூல்டு குளோவ் பாக்ஸ், ஃபேன்சி ஷிஃப்டர், ரியர் பகுதிக்கான ஏசி வெண்டுகள், இரண்டாம் தலைமுறை ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் (குரல் கட்டளை வசதி உடன்) மற்றும் 382 லிட்டர் பூட் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளும் புதிய நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான் எஸ்யூவி-க்கு வரவேற்பு பலமடங்கு அதிகம். இந்த வரவேற்பை மேலும் இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே நெக்ஸானில் புதிய ஏஎம்டி தேர்வுகள் மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 12:06 [IST]
English summary
Tata launches new affordable amt options in nexon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+