ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
கமர்சியல் வாகன மார்க்கெட்டில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தனது டாடா மேஜிக் வாகனத்தில் ஒரே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் இயங்கும் வகையான புதிய வாகனம் ஒன்றை இன்று காட்சிப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் 10 பேர் பயணிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கமர்சியல் வாகன செக்மெண்டில் இந்தியாவில் டாடா நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆட்களை கிடையாது. அந்த அளவிற்கு அதிக அளவிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காம்பேக்ட் சைஸ் வேன் செக்மென்ட்டில் டாடா மேஜிக் என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது.

இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் பயணம் செய்ய முடியும். பார்ப்பதற்கு ஆட்டோ போல இருக்கும் இந்த வாகனம் தான் இன்று லாஸ்ட் மைல் டெலிவரியில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமாக இருக்கிறது. சரக்குகளை ஏற்றி செல்லவும், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லவும், சில ஊர்களில் ஷேர் ஆட்டோ போல செயல்படவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த டாடா மேஜிக் வாகனம் அதிக நம்பக தன்மை வாய்ந்ததாகவும், அதிக திறன் கொண்டதாகவும் இருப்பதால் பலர் இதை நீண்ட ஆண்டுகளாக விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் 4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை டாடா நிறுவனம் பிடித்துள்ளது. இந்தக் கொண்டாடும் விதமாக இந்த காரின் பை ஃப்யூயல் வேரியன்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
பை ஃப்யூயல் என்றால் ஒரே நேரத்தில் பெட்ரோலிலும் அதே நேரம் சிஎன்ஜியிலும் இயங்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டாடா மேஜிக் வேரியன்டின் இன்ஜினை பொறுத்தவரை 694 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 60 லிட்டர் சிஎன்ஜி டேங்க்கும், ஐந்து லிட்டர் பெட்ரோல் டேங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோலையும் சிஎன்ஜியையும் முழுமையாக நிரப்பினால் 380 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதை நாம் கணக்கு செய்து பார்த்தால் 60லிட்டர் சிஎன்ஜி டேங்கில் 10 கிலோ சிஎன்ஜியை நிரப்ப முடியும். அதே நேரம் 5 லிட்டர் பெட்ரோலையும் சேர்த்து கணக்கீடு பார்க்கும்போது ஒருமுறை சிஎன்ஜி டேங்கையும் பெட்ரோல் டேங்கையும் முழுமையாக நிரப்ப இன்றைய சிஎன்ஜி/ பெட்ரோல் விற்பனை விலையில் ரூபாய் 1260 செலவாகிறது. இதன் மூலம் 380 கிலோ மீட்டர் வரை பயணித்தால் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 3.3 ரூபாய் தான் செலவாகிறது.
இதில் நீங்கள் பெட்ரோலை தேவைக்கு மட்டும் பயன்படுத்தி பெரும்பாலும் சிஎன்ஜியை அதிகமாக பயன்படுத்தும் போது இன்னும் குறைவான செலவில் பயணம் செய்ய முடியும். இதற்காக இந்த பை ஃப்பூயல் வேரியன்டில் சில முக்கியமான அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி எக்கோ ஸ்விட் மற்றும் கியர் ஸ்விஃப்ட் அட்வைஸர் ஆகிய அம்சங்கள் உள்ளன. இதை பயன்படுத்தும் போது டிரைவருக்கு இன்னும் எரிபொருள் செலவு குறைய வாய்ப்புள்ளது.
டாடா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த பை ஃப்யூயல் டாடா மேஜிக் வாகனம் தற்போது விற்பனையாகி வரும் வாகனத்தை விட அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்டதாகவும், அதே நேரம் குறைவான பராமரிப்பு செலவு கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்திற்கு 2 ஆண்டுகள் அல்லது 72,000 கிலோமீட்டர் வரை வாரண்டியை அந்நிறுவனம் வழங்குகிறது.
டாடா நிறுவனம் இந்த மேஜிக் பை ஃப்யூயல் வாகனத்தின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் டாடா மேஜிக் கோல்டு காரை பொருத்தவரை ரூபாய் 5.65 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் காரை பொருத்தவரை ரூபாய் 7.34 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதைவிட பை ஃப்யூயல் வாகனத்தின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலுக்காக பயன்படுத்துவதால் இவர்களுக்கு மைலேஜ் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூபாய் 3.3 செலவில் பயணம் செய்வதால் இந்த வாகனத்தை விற்பனை அதிகம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications







