இந்தியாவே எதிர்பார்த்த 2 கார் வரப்போகுது! டாடா, மஹிந்திரா ஷோரூம்ல கூட்டம் குவியப்போகுது!

டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த இரு கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் பலர் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார் குறித்த விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.

டாடா கர்வ் இவி: டாடா நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி ஸ்டைலில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும் என்றும் அதன்பிறகு மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு இதன் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

Tata Mahindra Electric SUVs Launch

இதில் டீசல் இன்ஜின் உடன் கூடிய கர்வ் கார் கடந்த மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கர்வ்இவி கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் அது டாடா நெக்ஸான் இவி காரை விட அதிக பிரிமியம் அம்சம் கொண்ட காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள், சிங்கிள் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரைப் பொறுத்தவரை டாப் வேரியண்ட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வேரியன்ட்கள் எல்லாம் பேட்டரி ஆப்ஷனை பொறுத்து ரேஞ்ச் மாறுபட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பேட்டரி ஆப்ஷன் குறித்த விரிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tata Mahindra Electric SUVs Launch

இந்த டாடா கர்வ் காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஏசி சார்ஜிங் அதிகமான நேரத்தை சார்ஜ் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் என்றால் மிக குறைவான நேரத்திலேயே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். இதுபோக இந்த காரில் வெஹிக்கிள் 2 லோடு ஆப்ஷன்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 இவி: மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 இவி காரை எக்ஸ்யூவி 400 காருக்கு குறைவான ரேஞ்சில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் வெர்ஷன் காரின் லுக்கில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Mahindra Electric SUVs Launch

இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை எக்ஸ்யூவி 700 காரில் உள்ள பல்வேறு வடிவமைப்பு அம்சங்கள் இந்த காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பிஇ ரேஞ்ச் வாகனங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறதோ அதே போல இந்த எக்ஸ்யூவி 300 கார் வடிவமைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 14 லட்சம் முதல் ரூபாய் 17 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் என்ட்ரி லெவல் மற்றும் மிட்ஸ்பெக் வேரியன்ட்களான டாடா நெக்ஸான் இவி கார்களுடன் மார்க்கெட்டில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி 300 காருக்கு பிறகு இந்த கார் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

இந்த காரில் வெளிப்புறத்தில் எல்இடி டிஆர்எல்கள் முன் பக்க இரண்டு பார்ட் கிரில் செக்ஷன், பெரிய ஏர்ன்லெட் பின்பக்கம் பெரிய எல் இ டி லைட், ஸ்போர்டியான பம்பர்கள், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் இடம்பெறும் எனவும் உட்பக்கம் பெரிய டச் ஸ்கிரீன், இன்போடெயின்மண்ட் சிஸ்டம்,

வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டவுடன் இடம்பெறும் என்றும் இது போக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 35 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024-ம் ஆண்டின் முதல் காலாண்டு இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பல்வேறு முக்கியமான அப்டேட்கள் செய்யப்பட்டு கார்கள் வழியாக உள்ளன. அதில் இந்த டாடா மட்டும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த கார்கள் எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 12:49 [IST]
English summary
Tata mahindra electric suvs launch coming months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X