துணை முதல்வர் மாதிரி 2வது இடத்துல இருந்த கம்பெனிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் மிக மோசமான விற்பனையை பெற்ற மாதமாக அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் இந்நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் அனுமதிப்பை பெற்று வரும் நிலையில், இப்படியான விற்பனை வீழ்ச்சி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது அக்டோபர் மாதம் பிறந்த நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கடந்த செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விபரத்தை பார்க்கும்போது நமக்கு பெரும் மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மிக மோசமான விற்பனையை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

tata motors sales september 2024

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 41,063 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு மிகக் குறைவான விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் தான் நடந்துள்ளது. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மொத்தம் 44,089 வாகனங்கள் விற்பனையான நிலையில் தற்போது 3746 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 8.36% விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 44,142 வாகனங்கள் விற்பனையாக இருந்தன. அதை ஒப்பிடும்போது தற்போது 3079 வாகனங்கள் குறைவாக விற்பனையாகிய 6.98 சதவீதம் அளவிற்கு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்நிறுவனம் அனைத்து செக்மெண்டிலும் மிகக் குறைவான அளவில் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

tata motors sales september 2024

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் மொத்தம் 41,063 வாகனங்களை கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 44,809 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அடுத்ததாக ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 250 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 508 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதிலும் மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 4650 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6,050 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 1370 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

tata motors sales september 2024

ஒட்டுமொத்தமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன செக்மெண்டில் 41,313 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 45,317 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தற்போது 4004 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன. இது மிக மோசமான விற்பனையை நிறுவனம் பெற்றுள்ளதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கமர்ஷியல் செக்மெண்டிலும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டிலும் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்திற்கு அடுத்த மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. ஹெவி கமர்ஷியல் வெஹிகிள் பிரிவில் கடந்த மாதம் 9,295 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. ஆண்டு இதே மாதம் 12,867 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது இது 28% விற்பனை வீழ்ச்சியாகும்.

ஒட்டுமொத்தமாக கமர்சியல் வாகனங்களை பொருத்தவரை 30,032 வாகனங்கள் இந்நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3964 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 23 சதவீத விற்பனை வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் இரண்டாம் காலாண்டு விற்பனையிலும் 6 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல தரமான தயாரிப்புகள் என்ற பெயரை பெற்றுள்ளன. இதனால் இது தயாரிப்புகளில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இப்படியாக சில மாதங்கள் குறைவாக விற்பனையாவது டாடா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக நிறுவனம் சரி செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 7:00 [IST]
English summary
Tata motor sales september 2024 all segment sales down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X