ஒத்த ஆளா வந்து 100 யூனிட் எலெக்ட்ரிக் டாடா ஏஸ் வாங்கிட்டு போயிட்டாங்க! வாங்கினது பெரும் புள்ளியாம்! யாரு அது?
மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் வாகனம் (Electric Vehicle)-களில் டாடா ஏஸ் இவி (Tata Ace EV)-யும் ஒன்றாகும். இது ஓர் முழு சார்ஜில் 154 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதுபோன்று தரமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நாட்டின் மின்சார வாகன பிரிவின் மகுடம் சூடப்படாத மன்னனாக அது விளங்கிக் கொண்டு இருக்கின்றது. டாடா-வின் இந்த தயாரிப்பையே ஒற்றை ஆளாக வந்து மிக அதிக எண்ணிக்கையில் ஓர் நிறுவனம் வாங்கிச் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது எந்த நிறுவனம்? எதற்காக மிகப் பெரிய எண்ணிக்கையில் டாடா ஏஸ் இவி வாங்கப்பட்டு இருக்கின்றன?, மேலும், டாடா ஏஸ் இவி-யின் சிறப்புகள் என்ன என்பது போன்ற முக்கியமான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மெஜந்தா மொபிலிட்டி (Magenta Mobility) எனும் நிறுவனமே டாடா ஏஸ் இவி-யை மிக மிக அதிக எண்ணிக்கையில் தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றது. மெஜந்தா மொபிலிட்டி ஓர் டெலிவரி சேவையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். தன்னுடைய இந்த சேவையை விரிவாக்கம் செய்யும் பொருட்டே அது தற்போது 100க்கும் அதிகமான யூனிட்டுகள் ஏஸ் இவி-யைப் பெற்றிருக்கின்றது.
தற்போது இந்திய சந்தையில் டாடா ஏஸ் இவி இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டாடா ஏஸ் இவி மற்றும் டாடா ஏஸ் இவி 1000 ஆகியவையே அவை ஆகும். இதில், ஏஸ் இவி 1000 வேரியண்டை 40 யூனிட்களும், டாடா ஏஸ் இவி 60 யூனிட்டுகளும் என மொத்தமாக 100 யூனிட்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன.
சுமார் 500 யூனிட்டுகளை வாங்குவதற்காக டாடா மோட்டார்ஸுடன் மெஜந்தா உடன் கடந்த ஆண்டு அக்டோபரில் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது 100 யூனிட்டுகள் டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டாடா ஏஸ் இவி 1000 இந்தியாவில் ரூ. 11.27 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட சற்று குறைவான விலையிலேயே டாடா ஏஸ் இவி விற்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 8.72 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா ஏஸ் இவி-யானது இவோஜென் (EVOGEN) பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது.
இது 7 வருட பேட்டரி உத்தரவாதத்தையும், 5 வருட பராமரிப்பு பேக்கேஜுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் ஒரு மேம்பட்ட பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் வாகனத்தின் ரேஞ்ஜை மேம்படுத்தவும், அதிக நேரத்திற்கு பதிலாக விரைந்து சார்ஜ் செய்யவும் இந்த அம்சங்கள் அனுமதிக்கின்றன.
இந்த வாகனத்தில் 27 kW (36 எச்பி) மற்றும் 130 என்எம் ஆற்றலை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டுள்ளது. இது அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லவும், செங்குத்தான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனத்தையே அதிக எண்ணிக்கையில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றது மெஜந்தா நிறுவனம்.
மெஜந்தா மொபிலிட்டி ஆனது ஹெச்பிசிஎல் (HPCL), பிபி (BP), மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley), ஜிடோ ஏஞ்சல் நெட்வொர்க் (JITO Angel Network) உள்ளிட்ட முன்னணி முதலீட்டாளர்களின் ஆதரவால் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வரும் நாட்களில் மேலும் சில நூறு யூனிட்டுகள் டாடா ஏஸ் இவி-யை டெலிவரி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டு மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கப்படுகின்றது. அவை காற்று மாசைக் குறைப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகின்ற என்கிற காரணத்தினாலேயே அரசும் இந்த விஷயத்தில் மிகப் பெரிய அளவில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே முன்னணி நிறுவனங்களில் பசுமை இயக்கத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








