டாடாவின் இந்த தொழிற்சாலையால் உ.பி தலைநகருக்கே பெருமை!! 32 வருடத்தில் 9 இலட்சமாவது வாகனம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் உத்தர பிரதேசத்தில் உள்ள அதன் லக்னோ தொழிற்சாலையில் இருந்து 9 லட்சமாவது வாகனத்தை வெளியேற்றி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், டாடா மோட்டார்ஸின் லக்னோ தொழிற்சாலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸுக்கு உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் தொழிற்சாலை உள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் முற்றிலுமாக டாடா கமர்ஷியல் வாகனங்கள், அதாவது டாடா பேருந்துகள், லாரிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

tata celebrates 900000th vehicle rollout

இந்த நிலையில், இந்த லக்னோ தொழிற்சாலையில் இருந்து வெற்றிக்கரமாக 9 லட்சமாவது வாகனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வெளியே அனுப்பியுள்ளது. இதனை சிறிய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டாடியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளும் தொழிற்சாலைக்குள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை ஆனது தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தும் தொழிற்சாலையாக இந்திய தொழில் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், டாடாவின் இந்த தொழிற்சாலையில் 6 மெகாவாட்ஸ் சூரிய மின் நிலையம் உள்ளதால், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவு எப்போதும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு மாசற்ற பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ப செயல்படும் இந்த தொழிற்சாலையில் வாகனங்களுக்கு பெயிண்ட் மற்றும் வெல்டிங் அடிக்கும் வேலைகளை மேற்கொள்வதற்காக ரோபேட்டிக் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1992ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே கூறியதுபோல், பேருந்துகள், கனரக லாரிகள் போன்ற கார்கோ வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் பேருந்துகளையும் இந்த தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதும் பாலின பாகுபாடின்றி செயல்படக்கூடியது.

அந்த வகையில், இந்த லக்னோ தொழிற்சாலையிலும் பெண் தொழிலாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் முக்கியத்துவம் அளிக்கிறது. டாடா மோட்டார்ஸின் லக்னோ தொழிற்சாலையில் எல்லா விதமான வேலை நேரங்களிலும் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் பேருந்துகள் மற்றும் லாரிகளை உற்பத்தி செய்யும் பணிகள் என அனைத்து விதமான பணிகளிலும் ஈடுப்படுகின்றனர்.

பெண் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து புது புது முதலீடுகளில் ஈடுப்பட்டுவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அவர்களது திறன்களை மேம்படுத்த மிகவும் ஆர்வம் காட்டுகிறது. டாடா மோட்டார்ஸின் இந்த லக்னோ தொழிற்சாலையில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 22% பெண்களாவர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பசுமையான சுற்றுச்சூழல், மாடர்ன் டெக்னாலஜி மெஷின்கள், பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் என லக்னோ தொழிற்சாலையில் அனைத்து பிரிவுகளிலும் டாடா மோட்டார்ஸ் கோல் போடுகிறது. இவ்வாறு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த தொழிற்சாலையில் வாகனங்கள் உற்பத்தியில் 9 இலட்சத்தை கடந்திருப்பது டாடா நிறுவனத்தின் நல்ல மனசுக்கு கிடைத்த பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2024, 23:36 [IST]
English summary
Tata motors celebrates 900000th vehicle roll out from its lucknow facility
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+