ரத்தன் டாடாவை இழந்து வாடும் டாடா மோட்டார்ஸ்க்கு இது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்! பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க!

ரத்தன் டாடாவின் இறப்பு இந்தியாவிற்கே ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகும். நமக்கே இப்படி என்றால் அவரால் மாபெரும் முன்னேற்ற பாதையைக் கண்ட டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பற்றிய சொல்லவா வேண்டும். இந்த மனிதரை இழந்ததால் மாபெரும் துயரத்திற்கு டாடா மோட்டார்ஸ் ஆளாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனத்திற்கு சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக ஓர் சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவில் மட்டுமின்றி இலகுரக மற்றும் நடுத்தர வணிக வாகனங்கள் (Light and Medium Commercial Vehicles) பிரிவிலும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த பிரிவில் ஏதோ ஒரு சாதாரண பங்களிப்பாளராக டாடா மோட்டார்ஸ் இருக்கவில்லை. அதுவே இந்த வாகன பிரிவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. நிறுவனத்தின் இலகுரக மற்றும் நடுத்தர வணிக வாகனங்கள் 15 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமான எண்ணிக்கையில் தற்போது விற்பனையாகி இருக்கின்றன.

Tata ilmcv reaches 15 lakh unit sales milestone

இது வரலாற்று சிறப்புமிக்க விற்பனை சாதனை ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் இந்த சாதனையைப் படைத்த முதல் டிரக் உற்பத்தி நிறுவனம் டாடா மோட்டார்ஸே ஆகும். இந்த சிறப்பு சாதனையைக் கொண்டாடும் விதமாக டாடா மோட்டார்ஸ் தன்னுடைய சில முக்கியமான இலகுரக மற்றும் நடுத்தர வணிக வாகன மாடல்களில் புதிய தேர்வுகளை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

டிரக் மற்றும் டிப்பர் ஆகியவற்றிலேயே புதிய தேர்வுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், டாடா எஸ்எஃப்சி 407 கோல்டு (Tata SFC 407 Gold), டாடா எல்பிடி (Tata LPT), டாடா எஸ்எஃப்சி 709ஜி (Tata SFC 709G) மற்றும் டாடா எல்பிடி 1109ஜி (Tata LPT 1109G) ஆகிய தேர்வுகளை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

Tata motors reaches 15 lakh truck sales milestone

இதுதவிர, டாடா எல்பிகே 1112 (Tata LPK 1112) மற்றும் டாடா எல்பிகே 1416 (Tata LPK 1416) தேர்வுகளையும் நிறுவனம் புதிதாக விற்பனைக்குச் சேர்த்திருக்கின்றது. இந்த வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் சில கவர்ச்சிகரமான நிதி திட்டங்களையும் அறிவித்து இருக்கின்றது.

இத்துடன், முதல் முறையாக டாடாவின் ஐஎல்எம்சி வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 ஆண்டுகள் கூட்டப்பட்ட வாரண்டியை வழங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றது. நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்கள் தொந்தரவற்ற பயன்பாட்டை பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த சலுகையை டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் ஐஎல்எம்சி வாகனங்கள் பிரிவில் 4 டன் முதல் 19 டன் வரையிலான வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விவசாயம், ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானத் துறை மற்றும் சரக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் என அனைத்து துறைகளுக்குமான வாகனங்களையே டாடா மோட்டார்ஸ் தயார் செய்து வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸின் இந்த பிரிவிற்கே தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. டாடாவின் பயணிகள் வாகன பிரிவிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் இப்போதைய பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக பஞ்ச், நெக்ஸான் உள்ளிட்டவை இருக்கின்றன.

நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றவையாக இருக்கின்றன. இதுதவிர அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியவையாக அவைக் காட்சியளிக்கின்றன. இதனாலேயே டாடா கார்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டு உள்ளது. இந்த நிலையிலேயே டாடாவின் ஐஎல்எம்சிவி-களுக்கும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடாவை இழந்து வாடும் டாடா மோட்டார்ஸ்க்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த விற்பனை சாதனை அமைந்திருக்கின்றது. மேலும், டாடாவின் பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமல்ல கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2024, 18:22 [IST]
English summary
Tata motors celebrates historic sales milestone of 15 lakh trucks in ilmcv segment
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+