ரத்தன் டாடா நம்மல விட்டு போனதையே தாங்கிக்க முடியல.. இதுல இந்த காருல வேற கை வச்சிருக்காங்களா! மனசு தாங்கல!!
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் (Punch) இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவின் மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. அதுமட்டுமில்லைங்க விலை குறைவாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடலாகவும் பஞ்ச் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலிலேயே தற்போது டாடா மோட்டார்ஸ் கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது டாடா கார் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சமீபத்தில்தான் இந்த நிறுவனத்தின் பெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ரத்தன் டாடா காலமானார். இந்த இழப்பினால் ஏற்பட்ட சுவடுகளே இன்னும் மறையாத நிலையில் டாடா மோட்டார்ஸ் பஞ்ச் கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகளை விற்பனையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டு இருந்த அந்த வேரியண்டுகள் சில நீக்கப்பட்டு உள்ளன. பஞ்ச் கார் மாடலில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வரும் அட்வென்சர் (Adventure) ட்ரிம்மிலேயே சில ஆப்ஷன்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. முன்னதாக பஞ்ச் அட்வென்சர் ட்ரிம்மில் அட்வென்சர் (Adventure), அட்வென்சர் ரிதம் (Adventure Rhythm), அட்வென்சர் எஸ் (Adventure S) மற்றும் அட்வென்சர் பிளஸ் எஸ் (Adventure+ S) ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.
இவற்றில் இரண்டையே டாடா மோட்டார்ஸ் தற்போது நீக்கி இருக்கின்றது. அட்வென்சர் மற்றும் அட்வென்சர் ரிதம் ஆகியவையே அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது. பஞ்ச் கார் மாடலின் அடிமட்ட ஆப்ஷனுக்கு மேலே இடத்தில் இருந்த ஆப்ஷன்களே இவை ஆகும்.

அதாவாது, சற்று குறைவான விலையில் சற்று அதிக அம்சங்களை தாங்கிய ஓர் ஆப்ஷன்களே இவை ஆகும். இவற்றையே டாடா மோட்டார்ஸ் வெளியேற்றி இருக்கின்றது. இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் டாடா கார் என்று பஞ்ச்-ஐ சொல்லலாம். கடந்த காலங்களில் டாடா இண்டிகா எப்பிட நாட்டில் விற்பனையாகியதோ அதை போலவே இதுவும் மிக சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த கார் மாடலை டாடா மோட்டார்ஸ் பெட்ரோல், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஐசிஇ வெர்ஷன்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த கார் மாடலை எலெக்ட்ரிக் அவதாரத்திலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. டாடா பஞ்ச் கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 6.12 லட்சம் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 9.44 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுமட்டுமில்லைங்க, கேமோ எடிசன் எனும் சிறப்பு பதிப்பிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதன் விலை ரூ. 8.44 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விழாக் காலத்தை முன்னிட்டே இந்த காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி-யும் ஒன்றாகும். இது ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் பயணிக்க ஏதுவான கார் மாடலாக பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications









