கார்களை தயாரிக்க டாடா உருவாக்கிய புதிய பிளாட்பாரம்.. சொகுசு கார்களையே என்னப்பா இந்த பக்கம்னு கேக்கும் போலையே!

நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அதன் கர்வ் (Curvv) எனும் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்து வந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஐசிஇ (ICE) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) என இரண்டு விதமான அவதாரங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இன்றைய தினம் கர்வ் இவி (Curvv EV)-யே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஐசிஇ வெர்ஷனின் விலைகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், டாடா மோட்டார்ஸ் இந்த கர்வ் கார் மாடலுடன் அட்லஸ் (ATLAS) எனும் அதன் புதிய கார் கட்டுமான தளத்தை (Platform)யும் அறிமுகம் செய்திருக்கின்றது. அடாப்டீவ் டெக் ஃபார்வார்டு லைஃப்ஸ்டைல் ஆர்கிடெக்சர் (Adaptive Tech Forward Lifestyle Architecture) என்பதன் சுருக்கமே அட்லஸ் ஆகும்.

Tata motors debuts atlas platform

இது ஓர் புத்தம் புதிய வாகனக் கட்டமைப்பு ஆகும். இந்த இயங்குதளத்தின் வாயிலாக பலதரப்பட்ட உடல் அமைப்பு மற்றும் பவர்டிரெய்ன் தேர்வுகளைக் கொண்ட கார்களை உருவாக்க முடியும். குறிப்பாக, விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் நம்பப்படும் சியரா உட்பட டாடாவின் எதிர்கால ஐசிஇ வாகனங்கள் பல இந்த தளத்தைக் கொண்டே உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அட்லஸ் இயங்குதளத்தின் வாயிலாக வெவ்வேறு வீல்பேஸ் மற்றும் அகல அமைப்புகளைக் கொண்ட வாகனங்களையும் தயாரிக்க முடியும் என டாடா தெரிவித்து இருக்கின்றது. 3.9 மீட்டர் முதல் 4.6 மீட்டர் நீளம் வரையிலான வாகனங்களைகூட இதில் தயார் செய்துக் கொள்ள முடியுமாம். இதுதவிர, முன்னதாக கூறியதை போலவே இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக பன்முக உடல் அமைப்பைக் கொண்ட வாகனங்களையும் தயார் செய்ய முடியும்.

அதாவது, எஸ்யூவி, செடான் மற்றும் ஹேட்ச்பேக் போன்ற கார்களின் உற்பத்தியை ஆதரிக்கும் வகையிலேயே இந்த கார் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க மேம்பட்ட பாதுகாப்பைக் கொண்ட காராகவும் இந்த தளத்தில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. சஸ்பென்ஷன் மற்றும் என்ஜின் ஆகியவற்றை வலுவாக தாங்கிப் பிடிக்கும் மவுண்டிங் பாயின்டிறிற்கு டாடா இந்த தளத்தில் அதிகம் முக்கியத்துவம் வழங்கி இருப்பதாக தெரிகின்றது.

ஆகையால், பாதுகாப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையில் நிறுவனத்தின் இப்போதைய தயாரிப்புகளுக்கே இந்த புதிய தளம் சவால்விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, மோதலின்போது ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான வசதியும் இந்த தளத்தில் வழங்கப்பட்டு இருப்பதாக டாடா தெரிவித்து இருக்கின்றது.

அட்லஸ் பிளாட்பாரம், மேம்பட்ட மின் கட்டமைப்பு மற்றும் கிளவுட் இயங்குதளத்தையும் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த தளத்தில் உருவாக்கப்படும் வாகனங்கள் மிகவும் அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட வாகனமாக இருக்கும் என தெரிகின்றது. இந்த தளத்தை பயன்படுத்தி டாடா மோட்டார்ஸ் முதலில் சியாரா எஸ்யூவி கார் மாடலையே உருவாக்கும் என நம்பப்படுகின்றது.

இதுமட்டுமில்லைங்க, நெக்ஸான் போன்ற நிறுவனத்தின் பிற முன்னணி மாடல்கள் இதன் வாயிலாகவே அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்றும் நம்பப்படுகின்றது. எனவே எதிர் காலத்தில் டாடாவின் தயாரிப்புகள் இன்னும் கவர்ச்சியானதாகவும், அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக தயாரிக்கும் வாகனங்கள் அதிகவும் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீர் நிலைகளை சமாளிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவும் டாடாவின் வாகனங்கள் இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2024, 20:15 [IST]
English summary
Tata motors introduces atlas platform for next gen cars and suvs
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+