பண்டிகை காலத்தை முன்னிட்டு கார்களின் ஆரம்ப விலையை குறைத்த டாடா.. இவ்ளோ குறைப்பாங்கனு யாருமே எதிர்பாக்கல!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) வரும் விழாக் காலத்தை முன்னிட்டு அதன் அனைத்து கார் மாடல்களின் விலையையும் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'கார்களுக்கான திருவிழா' (Festival of Cars) எனும் பெயரிலேயே விலை குறைப்பை அது செய்திருக்கின்றது. ரூ. 30 ஆயிரம் தொடங்கி ரூ. 1.80 வரை விலை குறைப்பைச் செய்திருக்கின்றது. இந்த பதிவில் எந்தெந்த மாடலின் விலை எவ்வளவோ ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), நெக்ஸான் (Nexon), ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இவற்றின் ஆரம்ப விலையையே டாடா மோட்டார்ஸ் தற்போது குறைத்திருக்கின்றது.

டியாகோ: இதுவே நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடல் ஆகும். இந்த காரின் விலையில் ரூ. 65 ஆயிரத்தைக் குறைத்திருக்கின்றது. ஆகையால், இதன் ஆரம்ப விலை ரூ. 4,99,900 ஆக மாறியிருக்கின்றது. அதாவது, ரூ. 5 லட்சத்திற்கே இந்த ஹேட்ச்பேக் கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிகோர்: நிறுவனத்தின் மற்றுமொரு விலை குறைவான கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் மாடலின் விலையில் ரூ. 30 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். இதன் விலையில் ரூ. 30 ஆயிரம் குறைக்கப்பட்டிருப்பது இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. முன்னதாக பார்த்த டியாகோவும் இதே 4 நட்சத்திர ரேட்டிங் பெற்ற கார் மாடலே ஆகும்.
அல்ட்ராஸ்: டாடா மோட்டார்ஸ் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாக இது இருக்கின்றது. குறிப்பாக, அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கிய ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இதனன் விலையில் ரூ. 45 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது இதன் ஆரம்ப விலை ரூ. 6.49 லட்சமாக குறைந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
நெக்ஸான்: டாடா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் இதுவாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் தற்போதைய ஆரம்ப விலை ரூ. 7,99,990 ஆகும். ரூ. 80 ஆயிரம் வரை குறைக்கப்பட்டதாலேயே இந்த அளவிற்கு குறைவான விலையில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஹாரியர்: இதன் இப்போதைய ஆரம்ப விலை ரூ. 14.99 லட்சம் ஆகும். ரூ. 1.60 லட்சம் வரை இதன் விலையில் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதுவும் டாடா மோட்டார்ஸின் அதிக பாதுகாப்பு திறன் மிக்க கார் மாடல் ஆகும். ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. பாரத் என்சிஏபி-யிடமிருந்தே இந்த ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது. முரட்டுத் தனமான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களுக்கு பெயர்போன கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.
சஃபாரி: இதன் விலையில் ரூ. 1.80 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விலை குறைப்பால் இதன் ஆரம்ப விலை ரூ. 15.49 லட்சமாக குறைந்திருக்கின்றது. ஹாரியர் காரை போலவே இதுவும் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது.
ரூ. 45 ஆயிரத்திற்கான சிறப்பு பலன்களும் கிடைக்கும்: ஆரம்ப விலை மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கின்றது என புலம்புபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக டாடா மோட்டார்ஸ் ரூ. 45 ஆயிரத்திற்கான சிறப்பு பலன்கள் திட்டத்தையும் அறிவித்திருக்கின்றது. இது அனைத்து மாடல்களின் அனைத்து வேரியண்டிற்கும் பொருந்தும் என தெரிகின்றது. கேஷ்பேக் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களை வழங்குதல் ஆகியவற்றையே இதன் கீழ் டாடா வழங்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்து வந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மிகப் பெரிய சரிவை அது சந்தித்து இருக்கின்றது. இந்த சரிவில் இருந்து மீள இந்த விலை குறைப்பு நடவடிக்கை மிகப் பெரிய உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த விலை குறைப்பு கொஞ்சம் நாளைக்கு மட்டுமே கிடைக்கும். அக்டோபர் 31 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








