ரூ. 3,500ஆக இருந்த கட்டணத்தை ரூ. 1,999 ஆக குறைச்சுட்டாங்க.. டாடாவிற்கு இருக்க மனசு வேற யாருக்குமே வராது!

வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சேவைகளை வழங்கி வருகின்றது. அதில் ஒன்றே ஐஆர்ஏ கன்னெக்டட் தொழில்நுட்பம் (iRA Connected Tech) ஆகும். இது ஓர் சந்தா திட்டம் (Subscription) ஆகும். ஆமாங்க, டாடா காரை வாங்கியிருந்தாலும் இந்த சேவையை தனியாகவே பணம் செலுத்தி வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக பல்வேறு மிக முக்கியமான மற்றும் சிறப்பான சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தையே தற்போது டாடா நிறுவனம் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயே கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே தற்போது இந்த கட்டணத்தை ரூ. 1,999 ஆகா குறைத்திருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். வரிகள் தனியாக செலுத்த வேண்டும்.

Tata motors reduces annual ira subscription fees

விலை குறைவாக இந்த சேவையை வழங்குவதுடன் கூடுதல் சிறப்பு சேவைகளையும் ஐஆர்ஏ 2.0 திட்டத்தின் வாயிலாக வழங்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கின்றது. அந்தவகையில், கார் இணைப்பு தொழில்நுட்பங்களான ரிமோட் கம்மேண்ட்ஸ், நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங், சார்ஜிங் மற்றும் ப்யூவல் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட சேவைகளையே அது வழங்க இருக்கின்றது.

இதுதவிர, காரின் ஸ்டேட்டஸ், பாதுகாப்பு மற்றும் ஹெல்த் மானிட்டர் உள்ளிட்ட சேவைகளையும் இதன் வாயிலாக வழங்க இருக்கின்றனர். டாடா மோட்டார்ஸ் கட்டணமின்றியும் சில பிரத்யேக கார் இணைப்பு வசதிகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், கார் சர்வீஸை புக் செய்யும் வசதி, சாலையோர உதவிக்கான கோரிக்கையை முன் வைப்பது மற்றும் காரின் வேல்யூவை கண்டறிவதற்கான கோரிக்கையை முன் வைத்தல் உள்ளிட்டவற்றையே அது வழங்கி வருகின்றது.

தொடர்ந்து, காருக்கான அணிகலன்களை வாங்குதல் போன்றவற்றையும் இதன் வாயிலாக செய்துக் கொள்ள முடியும். இத்தகைய சிறப்பான சேவையை கூடுதலாக வழங்கும் ஐஆர்ஏ 2.0-வின் திட்டத்திற்கான கட்டணத்தை டாடா மோட்டார்ஸ் தற்போது குறைத்திருக்கின்றது. இதன் வாயிலாக டாடாவின் இந்த சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கக் கூடும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ரூ. 1,500 வரை இதன் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது டாடா கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் அனைத்து கார்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என கூறப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸின் கீழ் பலதரப்பட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

டியாகோ, டிகோர், பஞ்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், கர்வ், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களே டாடாவின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் பெரும்பாலான கார் மாடல்கள் சிஎன்ஜி மற்றும் மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் ஐசிஇ பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக பஞ்ச்-ம், எலெக்ட்ரிக் பிரிவில் நெக்ஸான் இவி-யும் இருக்கின்றன என்பது குறிப்பிட்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடாவின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது. இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியிலேயே எம்ஜி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே, நெக்ஸான் இவி-யை விட அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக எம்ஜி விண்ட்ஸர் இவி மாறியுள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், வரும் நாட்களில் மேலும் பல புதுமுக மின்சார கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 28, 2024, 11:53 [IST]
English summary
Tata motors reduces annual ira subscription rates for enhanced connected car services
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+