தார் காரை காலி செய்யப்போகும் டாடா! மறுபடியும் இந்த காரை கொண்டு வரப்போறாங்களா?
இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், ஆஃப்-ரோடு திறன் கொண்ட ஒரு SUV காரை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை மஹிந்திரா தார் காரை எதிர்த்துப் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தனது முக்கிய SUV காரான டாடா ஹாரியர் காரின் ஆல்வீல் டிரைவ் (AWD) எடிசனை அறிமுகப்படுத்துவதைப் பற்றி ஆலோசித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது, டாடாவின் SUV வரிசையில் பஞ்ச், நெக்ஸான், கர்வ், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்கள் உள்ளன. இருப்பினும், இந்த வாகனங்களில் எதுவும் ஆஃப்-ரோடிங்கிற்கு AWD ஆப்ஷன் வழங்கவில்லை. AWD ஹாரியரின் அறிமுகம் செய்வதன் மூலம் டாடா நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் உள்ள இந்த இடைவெளியை நிரப்பும். இந்த கார் டாடா நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி பெற்று அதிக ஆப்ஷன் கொண்ட கார்களை கொண்டு வருவதை அதிகப்படுத்தும்.

ஹாரியரின் கம்பஷன் இன்ஜின் (ICE) எடிசன் கூடுதலாக, டாடா மோட்டார்ஸ் AWD திறன் கொண்ட எலெக்ட்ரிக் வேரியன்டையும் அறிமுகப்படுத்த ஆராய்ந்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஹாரியரின் காரின் கான்செப்ட் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குலோபல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எடிசன் ஆஃப்-ரோடு டிரைவிங்கிற்கு ஏற்றவாறு சிறப்பு டிரைவிங் மோடு கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப்-ரோடிங் ஹாரியர் EV இன் உற்பத்தி பதிப்பு 2025 ஜனவரிக்கு திட்டமிடப்பட்டுள்ள பாரத் மொபிலிட்டி நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு விரைவில் விற்பனைக்காக இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில், இந்த மாடல் சந்தையில் மஹிந்திரா தார் காருக்கு நேரடியாக போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் ஆஃப்-ரோடிங் ஹாரியர் EV பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தொழில் வல்லுநர்கள் அது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகிறார்கள். இந்த அறிமுகம் SUV பிரிவில் டாடாவின் லைன்அப்களை விரிவுபடுத்தவும் மற்றும் அட்வெஞ்சருக்கு தயாரான வாகனங்களைத் தேடுபவர்களுக்கு நல்ல ஆப்ஷனை வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது டாடா ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. .
ஹாரியரின் ICE மற்றும் எலெக்ட்ரிக் எடிசன்களில் AWD அமைப்பைச் சேர்ப்பது, புதுமையானது மற்றும் பல்வேறு நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் டாடாவின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. ஆஃப்-ரோடு திறன்களுடன் தங்கள் தயாரிப்பு ரேஞ்சை மேம்படுத்வது மூலம், டாடா மோட்டார்ஸ் அதிக வாடிக்கையாளர்களை பிடிக்கவும் இந்தியாவின் போட்டித்தன்மை வாய்ந்த வாகனத் துறையில் தனது நிலையை வலுப்படுத்தவும் இலக்கு வைக்கிறது.

டாடாவின் முயற்சி, பல்வேறு நிலப்பரப்புகளைச் சமாளிக்கக்கூடிய பல்துறை SUV களை வழங்குவதில் உற்பத்தியாளர்களிடையே அதிகரித்து வரும் டிரெண்டை பிரதிபலிக்கிறது. அட்வெஞ்சரான வாகனங்களின் மீதான நுகர்வோர் ஆர்வம் அதிகரித்து வருவதால், AWD ஹாரியரை அறிமுகப்படுத்துவது டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி மற்றும் சந்தைப் பங்கை விரிவுபடுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனமாக மாறி வருகிறது. இந்நிறுவனம் தரமான தயாரிப்புகளை வெளியிடும் என்ற பெயரும் இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தில் ஆல்வீல் டிரைவ்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் வாகனங்கள் இதுவரை இல்லை. இதனால் இந்த ரக வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து வந்தனர்.
இந்நிலையில் தான் டாடா நிறுவனம் இந்த சிஸ்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதனால் ஆஃப் ரோடிங் செல்ல விரும்பும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். இந்த காரின் வருகைகைக்கு பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் கார் ஆஃப் ரோடிங் அம்சங்களுக்காக பெயர் பெற்ற காராக இருக்கிறது. இதற்கு போட்டியாக ஹாரியர் கார் களம் இறங்கினாலும் இதன் கிரவுண்ட் கிளியரன் மற்றும் லுக் உள்ளிட்ட பல விஷயங்கள் தார் காருக்கு போட்டியாக வர முடியாமல் இருக்கலாம். டாடா நிறுவனம் வேறு காரை தார் காருக்கு போட்டியாக களம் இறக்க கூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









