மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட டாடா நிறுவனம்! எவ்வளவு சேல்ஸ் பண்ணிருக்குது தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 50,297 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இந்தியாவின் 3வது மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களையும் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஏப்ரல் மாதம் துவங்கி விட்ட நிலையில் கடந்த மார்ச் மாத விற்பனை விபரங்களை தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் மார்ச் மாதத்தில் மொத்தம் 50,297 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 40,044 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 6,066 வாகனங்களை விற்பனை செய்து 13.77% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 51,267 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது அதை ஒப்பிடும்போது கடந்த மாசி மாதம் 1157 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 2.26% விற்பனை வீழ்ச்சியாகும். இந்நிறுவனம் ஆண்டு விற்பனையில் வளர்ச்சியையும் மாத விற்பனை ஒப்பீட்டில் வீழ்ச்சியும் சந்தித்துள்ளது.
டாடா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் செய்த ஒட்டுமொத்த விற்பனையில் 6,738 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெறும் 6,072 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்நிறுவனம் தான் வளர்ச்சி பெற்ற நிறுவனமாக இருக்கிறது.

கடந்த நிதியாண்டு குறித்த விபரங்களை பார்க்கும்போது டாடா நிறுவனம் மொத்தமாக 5,70,995 வாகனங்களை 2023-24-ம் நிதி ஆண்டில் விற்பனை செய்துள்ளது. இதுவே 2022-23 ம் நிதியாண்டில் மொத்தம் 5,38,640 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.
டாடா நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை கணிசமான அளவு வளர்ந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்த இரு செக்மெண்டில் உள்ள வாகனங்கள் மட்டும் 48% விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் எதிர்காலங்களில் இந்த ரக வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்கு ஹுண்டாய் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டே வருகின்றன. ஆனால் இந்த மாதம் இரண்டாவது இடத்தை ஹுண்டாய் நிறுவனத்திற்கு விட்டுக் கொடுத்து டாடா நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
டாடா நிறுவனம் இந்த 2024-25ம் தேதி ஆண்டில் மிகப்பெரிய திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 42 லட்சம் வாகனங்களை இந்த நிதியாண்டில் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இதற்காக பல்வேறு பெரிய பெரிய திட்டங்களை எல்லாம் நிரூபணம் செய்யப் போவதாக தற்போது அறிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் இந்த நிதியாண்டு விற்பனையை பார்க்கும் போது தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டாக இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விற்பனையை நிறுவனம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக நிதியாண்டில் 10 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் கடந்த மார்ச் மாதமும் கடந்த நிதியாண்டிலும் சிறப்பான விற்பனையை பெற்று நல்ல வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில்,தொடர்ந்து இந்த நிதியாண்டிலும் சிறப்பான வளர்ச்சியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் எடுக்க போகும் முக்கிய முடிவுகளால் இந்த நிதியாண்டில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








