போட்டி நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்த டாடா... தரமான சம்பவத்தை பண்ணீட்டாங்க... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இந்த நிறுவனத்தின் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 47,983 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 47,107 ஆக மட்டுமே இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 7 கார்களை விற்பனை செய்து வருகிறது. டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா பன்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகியவை ஆகும்.

Tata Nexon Crash Test

இதில், டியாகோ, டிகோர், பன்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒட்டுமொத்த விற்பனையில் 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும் கூட, எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,364 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,516 ஆக இருந்தது. இது 2 சதவீத வீழ்ச்சி ஆகும். எனினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே.

Tata Punch EV

வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டு வரும் என உறுதியாக நம்பலாம். ஏனெனில் இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதவிர டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், டாடா கர்வ் இவி மற்றும் டாடா ஹாரியர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் சமீப ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. இவை இரண்டுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும்.

இதில், டாடா நெக்ஸான் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. மறுபக்கம் டாடா பன்ச் காரானது, மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் என 2 கார்களுமே குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதால்தான், வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் சரிவில் இருந்து மீண்டு வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 1, 2024, 23:56 [IST]
English summary
Tata motors sales report april 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+