பெரியவரு போனதும் எல்லாமே மாறீருச்சு! டாடா நிறுவனத்தை கை கழுவும் இந்திய மக்கள்! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு இது போதாத காலம் போல. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் அடி மேல் அடி விழுந்துள்ளது. முதலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை வார்த்தெடுத்த ரத்தன் டாடா (Ratan Tata) மறைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த அடி விழுந்துள்ளது. இந்த அதிர்ச்சி சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வடிவில் வந்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) வெறும் 48,423 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 48,637 ஆக இருந்தது.

Ratan Tata

அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 214 கார்களை குறைவாக விற்பனை செய்துள்ளது. இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான். ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம், வரலாறு காணாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துள்ளன.

பண்டிகை காலம் என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், முக்கியமான போட்டி நிறுவனங்கள் எல்லாம் விற்பனையில் வரலாறு படைத்து கொண்டுள்ள நேரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சறுக்கியுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Tata Punch

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்நாட்டில் 48,131 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 48,337 ஆக இருந்தது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 292 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 300 ஆக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 48,637 ஆக இருந்த கார்களின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 48,423 ஆக சரிவை சந்தித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பண்டிகை காலத்தில், மற்ற முன்னணி நிறுவனங்கள் எல்லாம் விற்பனையில் சாதனை படைத்துள்ள நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சரிவை சந்தித்திருப்பது என்பது அந்நிறுவனம் கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். ஆனால் ஒரு விஷயத்தை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இது மிகவும் சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே. எனவே கூடிய விரைவில், அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த சரிவில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டு வந்து, மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணம் செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 23:16 [IST]
English summary
Tata motors sales report october 2024
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+