மாருதியை புறம் தள்ள ஆரம்பிச்சுட்டாங்களோ.. டாடா ஷோரூமில் குவியும் மக்கள்.. எல்லாம் இந்த கார்களை வாங்கதான்!
சிஎன்ஜி (CNG) வாகன விற்பனையில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம். தன்னுடைய பெரும்பாலான கார் மாடல்களில் மாருதி சுஸுகி சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் அது முன்னிலையில் உள்ளது. ஆனால், இது ரொம்ப நாளைக்கு நீடிக்காதோ என்கிற சந்தேகத்தைத் தூண்டுகின்ற வகையிலான சம்பவமே தற்போது எழும்பி இருக்கின்றது. ஏனெனில், இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கைகள் மிகப் பெரிய அளவில் ஓங்கத் தொடங்கி இருக்கின்றது.
மாருதி சுஸுகிக்கு போட்டி அளிக்கும் வகையில் டாடாவும் அதன் முன்னணி கார் மாடல்கள் பலவற்றில் சிஎன்ஜி தேர்வை வழங்க ஆரம்பித்திருக்கின்றது. இதுதவிர சில தனித்துவமான அம்சங்களையும் தன்னுடைய சிஎன்ஜி கார் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் வழங்க ஆரம்பித்து இருக்கின்றது. இதன் விளைவாக டாடா சிஎன்ஜி கார்களின் விற்பனை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி வாகனங்கள் 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 91 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது 120 சதவீதம் அதிகம் விற்பனையாகும்.
சென்ற நிதியாண்டில் 41 ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்த என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் கூடுதல் சுவாரஷ்யம் என்னவென்றால், டாடாவின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையையே சிஎன்ஜி கார்களின் விற்பனை முந்தியிருக்கின்றது. டாடா எலெக்ட்ரிக் கார்கள் 2024 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 74 ஆயிரத்திற்கும் அதிமான யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 48 சதவீதம் ஆகும். இந்த 48 சதவீத வளர்ச்சியையே 120 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது டாடாவின் சிஎன்ஜி கார்கள். இதன் வாயிலாக டாடாவின் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கு சந்தையில் தேவை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
டாடா நிறுவனம் தன்னுடைய லேட்டஸ்ட் அறிமுகங்களான அல்ட்ராஸ் சிஎன்ஜி மற்றும் பஞ்ச் சிஎன்ஜி ஆகியவற்றை டூயல் சிலிண்டர் செட்-அப்பில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு சிலிண்டர்களிலும் சிஎன்ஜி-யை நிரப்பிக் கொள்ள முடியும். இரண்டு தனித் தனியான சிலிரண்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், பூட் ஸ்பேஸ் மிகப் பெரிய அளவில் குறையாமல் உள்ளது.
எனவே லக்கேஜ்களை மற்ற நிறுவனங்களின் சிஎன்ஜி வாகனங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே வைத்துக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை தாங்கியதாகவே டாடாவின் சிஎன்ஜி கார்கள் உள்ளன. இந்த மாதிரியான சிறப்பு வசதிகளின் காரணத்தினாலேயே தற்போது சிஎன்ஜி கார்கள் விற்பனையில் மிகப் பெரிய வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் சந்தித்து இருக்கின்றது.
இதுதவிர டாடா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு தரத்திற்கு பெயர்போனவையாக உள்ளன. இதனால்தான் டாடா ஒட்டுமொத்தமாக வாகன விற்பனையிலேயே முன்னணி இடத்தில் உள்ளது. டாடா நிறுவனம் இப்போதைய நிலவரப்படி அதன் பஞ்ச், அல்ட்ராஸ், டியாகோ, டிகோர் ஆகிய கார் மாடல்களிலேயே சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்து.
இதன் டியாகோ சிஎன்ஜி காரே இருப்பதிலேயே சற்று விலை குறைவானதாக உள்ளது. அதன் விலை ரூ. 6 லட்சத்து 59 ஆயிரத்து 900 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இது ஓர் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடலும் கூட என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் வாகன விற்பனையில் முன்னணியில் இருப்பதைப் போலவே சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் முன்னணியிலேயே உள்ளது. இந்த இடத்தையே அது விரைவில் கைவிட்டுவிடுமோ என்கிற எண்ணத்தை விதைக்கச் செய்திருக்கின்றது தற்போதைய டாடா மோட்டார்ஸின் விற்பனை வளர்ச்சி. இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








