ஃபோர்டு கார் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் டாடா கார்! அமெரிக்கா கொடி பறந்த இடத்துல வானுயர பறக்கும் இந்திய கொடி!

ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்ட முதல் டாடா கார் விற்பனைக்காக வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. நெக்ஸான் (Nexon SUV) காரே டாடாவின் முதல் காராக அங்கு வைத்து தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த சுவாரஷ்யமான மற்றும் முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கார் உற்பத்தி நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு (Ford)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் இல்லை. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியர்களைக் கவர தவறியதன் விளைவாக விற்பனை மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

Tata first car roll out from sanand plant

சொல்ல முடியாத அளவிற்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் ஃபோர்டு கார்கள் விற்பனையாகின. இதே நிலை நீடித்தால் இன்னும் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த ஃபோர்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு டாடா காட்டிவிட்டு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, தன்னுடைய இந்திய சொத்துக்களையும் கை மாற்றிவிடும் பணியிலும் அது களமிறங்கியது.

அந்தவகையிலேயே ஃபோர்டுக்கு சொந்தமான ஓர் ஆலை இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கைகளுக்கு மாற்றப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் ஆலையே டாடாவின் கைகளுக்கு மாறியது. இந்த ஆலையிலேயே டாடா சமீபத்தில் அதன் கார்களின் உற்பத்தியைத் தொடங்கியது.

Tata nexon roll out from sanand plant

இந்த நிலையிலேயே அந்த ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்ட முதல் டாடா கார் தற்போது விற்பனைக்கு வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஃபோர்டு கார் உற்பத்தி ஆலையில் இந்திய நிறுவனத்தின் கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வெளியேற்றப்பட்டு இருக்கும் இந்த நிகழ்வு இந்தியர்கள் மத்தியில் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

டாடாவின் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி கார் (Best Selling SUV Car) மாடலான நெக்ஸான் (Nexon)-தான் ஃபோர்டு கார் ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்ட முதல் டாடா கார் மாடலாகும். சென்ற ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த கார் தயாரிப்பு ஆலையை டாடா, ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தியது.

Ford sanand plant

இந்த ஆலை சுமார் 750 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தநிலையிலேயே சுமார் ஓராண்டுகள் ஆகின்ற நிலையில் அந்த ஆலையில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வெளியேற்றம் செய்யும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஒரு காலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கைகளில் இருந்த இந்த ஆலையில் இதுவரை லட்சக் கணக்கான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.

சுமார் 460 ஏக்கர் பரப்பளவு கொண்டதே இந்த ஆலை ஆகும். இந்த ஆலையில் வைத்து ஐசிஇ (பெட்ரோல் - டீசல்), வாகனங்கள் மட்டுமின்றி மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இங்கு ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்டுகள் வாகனங்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

Tata nexon

அதேவேளையில், இங்கு வைத்து ஆண்டுக்கு சுமார் 4.20 லட்சம் யூனிட்டுகள் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய ஆலை டாடாவின் எதிர்கால வளர்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதே இந்த உற்பத்தி ஆலை ஆகும்.

ஸ்டாம்பிங், உடல் கட்டுமானம், பெயிண்டிங் மற்றும் ஃபைனல் அசெம்பிளி என அனைத்தும் இந்த ஆலையில் நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் உயர் ஆட்டோமேஷன் மெஷின்கள் அங்கு நிறுவப்பட்டு இருக்கின்றன. எனவே டாடா இனி வரும் நாட்களில் உற்பத்தியிலும் கோலோச்சி நிற்கும் என எதிர்பார்க்கலாம்.

சில நுணுக்கமான மற்றும் நுண்ணிய வேலைகளை செய்ய நவீன ரோபோட்டுகள் இந்த ஆலையில் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, வெல்டிங், முக்கிய ரீ-டூலிங், பிரஷ் ஷாப் உள்ளிட்ட பணிகளை இந்த ரோபோட்டே மேற்கொள்ளும். இருப்பினும், இந்த ஆலையில் வேலை ஆட்களும் அதிகளவில் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.

இப்போதைய நிலவரப்படி சுமார் 1000 ஆயிரம் ஊழியர்கள் கார் உற்பத்தி பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் ஓராயிரம் பேரை பணியில் அமர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்து 3 முதல் 4 மாதங்களுக்குள் அவர்கள் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதைத்தொடர்ந்து, டாடா ஆலைக்கு தேவையான மின்சார தேவையை பூர்த்தி செய்ய சோலார் ரூஃபை ஆலையின் மேற்கூரையில் அமைக்க திட்டமிட்டு இருக்கின்றது. இந்த பணிகள் 2024 டிசம்பருக்குள் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 50 KW திறன் கொண்ட சோலார் ரூஃப்-டாப்பே ஆலையில் அமைக்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு ஆலையை கையகப்படுத்தி அதன் வாகனங்களை அந்த ஆலையில் வைத்து தயாரித்து இருப்பது இந்தியர்களை பெருமிதம் அடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இனம் புரியாத மகிழ்ச்சிக்கும் இந்த சம்பவம் நம் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் கார்கள் நாடு முழுவதும் விரைவில் விற்பனைக்கு வெளியேற்றப்பட இருக்கின்றன. நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார்கள் (eCars)-ம் இங்கு வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, January 12, 2024, 21:29 [IST]
English summary
Tata motors starts car production at ford sanand plant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X