தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூபாய் 8,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய ஆலை ஒன்றை அமைத்து இங்கு ஜாகுவார் நிறுவனத்தின் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக ஒரு கார் தயாரிப்பாளர் வரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் தரமான கார்களாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் இந்த நிறுவனத்தின் கார்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பை அதிகப்படுத்தவும் யோசித்து வருகிறது.

tata motors Tamilnadu plant

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே சர்வதேச அளவில் ஜாகுவார் நிறுவனத்தையும் வாங்கி நடத்தி வருவது நமக்கு தெரிந்ததுதான். இருந்தாலும் இந்த இரு நிறுவனங்களும் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 8000 கோடி முதலீட்டில் புதிய ஆலை ஒன்றை கட்டமைக்க முடிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் அந்த ஆலையில் என்ன விதமான கார்கள் தயாரிக்கப்பட போகிறது. எங்கு அந்த ஆலை அமையப்போகிறது என்ற விபரங்கள் தெரியாமல் இருந்தது. தற்போது இந்த விபரங்கள் எல்லாம் உறுதியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் இந்த ஆலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

tata motors Tamilnadu plant

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையை தமிழகத்தில் அமைத்தாலும், இங்கு டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளை தயாரிக்கப் போவதில்லை. மாறாக இந்த ஆலையை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்து கொள்ள ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்படி இந்த ஆலையை அமைத்து இங்கு ஜாகுவார் நிறுவனம் தனது வாகனங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் இந்த ஆலையிலிருந்து வாகனங்கள் தயாரிக்கப்பட போகிறது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்வதற்கு சென்னை ஏற்ற இடமாக இருக்கும் என்பதால் தான் தமிழகத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

tata motors Tamilnadu plant

இது மட்டுமல்ல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எலெக்ட்ரிபைடு மாடுலர் ஆர்க்கிடெக்சர் பிளாட்பார்மை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இதன்படி டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்த பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் கார் 2024-ம் ஆண்டு இறுதியிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இந்த இஎம்ஏ என்ற பிளாட்பார்மை கடந்த 2021-ம் ஆண்டு தான் உருவாக்கியது. இந்த பிளாட்பார்மில் தான் புதிய தலைமுறை வெலார், எவொக்யூ, டிஸ்கவர் ஸ்போர்ட், ஆகிய கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இந்த பிளாட்பார்ம் அடாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை தயாரிப்பதற்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இதில் கனெக்டிவிட்டி கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் நிறுவனத்தில் இந்த பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் வாகனங்களில் பேட்டரி, சாப்ட்வேர் அப்டேட், லெவல் டு ஆட்டோனமி, அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் பொருத்தப்படக்கூடிய பிளாட்பார்மாக இது உருவாக்கப்படும் என தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் மட்டுமல்லாமல் ஜாகுவார் நிறுவனம் தற்போது சீன நிறுவனமான செரி என்ற நிறுவனத்துடனும் தற்போது முதல் முறையாக பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது. இது சற்று சுவாரசியமான விஷயமாக இருக்கிறது.

ஜாக்குவார் நிறுவனம் தற்போது எக்ஸீடு நிறுவனத்தின் பேட்டரி எலெக்ட்ரிக் பிளாட்பார்மை பயன்படுத்த போகும் முதல் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் முதல் ஜாகுவார் நிறுவனத்தின் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் சென்னையில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரிப்பது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் ஜாகுவார் போன்ற பெரிய பிராண்டை வாங்கி நடத்தி வருவது நிச்சயம் இந்தியா எந்த அளவிற்கு வளர்ந்து உள்ளது என்பதை காட்டுகிறது. இந்நிலையில் இந்த பிராண்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தில் இந்த கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது நிச்சயம் தமிழகம் ஆட்டோமொபைல் துறையில் அடைந்துள்ள உள்ள வளர்ச்சியை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 19, 2024, 11:19 [IST]
English summary
Tata motors tamilnadu plant to manufacture jaguar land rover cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X