அமெரிக்க கொடி பறந்த இடத்தில் இந்திய கொடியை பறக்க விட்ட டாடா! வெறித்தனமான சம்பவம் இனிமேதான் நடக்க போகுது!

அமெரிக்காவை (US) சேர்ந்த புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு (Ford). இந்தியாவில் குஜராத் (Gujarat) மாநிலம் சனந்த் (Sanand) பகுதியில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அதை இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கைப்பற்றி விட்டது.

725.7 கோடி ரூபாய் செலவில், ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தொழிற்சாலையில் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது. தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் (IC Engine) கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

Tata Sanand Plant

ஆனால் கூடிய விரைவில் இங்கு எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) உற்பத்தி பணிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் (April) மாதத்தில் இருந்து, இந்த தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை தொடங்கவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (Tata Motors Passenger Vehicles) மற்றும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Tata Passenger Electric Mobility) ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரான சைலேஷ் சந்திரா (Shailesh Chandra), இதனை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tata Nexon Roll Out From Sanand Plant

இது குறித்து அவர் கூறுகையில், ''வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சனந்த் தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முதலில் இந்த தொழிற்சாலையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும்'' என்றார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள சனந்த் தொழிற்சாலையில் தற்போதைய நிலையில் ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்தி திறனை (Production Capacity) ஒரு ஆண்டுக்கு 4.20 லட்சம் கார்களாக அதிகரித்து கொள்ளவும் முடியும். தேவை அதிகரிக்கும்பட்சத்தில், உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என பிரத்யேகமாக இந்தியா முழுவதும் தனி ஷோரூம்களை திறக்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருவது இதற்கு ஒரு உதாரணம்.

இந்த வரிசையில்தான் புதிதாக கைப்பற்றப்பட்ட சனந்த் தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி பணிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான காத்திருப்பு காலத்தை (Waiting Period) குறைக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 27, 2024, 13:34 [IST]
English summary
Tata motors to build electric cars at sanand plant from april full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+