மாருதி எல்லாம் ஓரமா போ! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த டாடா!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் ரூபாய் 4.27 லட்சம் கோடி மார்க்கெட் மதிப்புடன் உலகின் டாப் 10 வாகன தயாரிப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய நிறுவனம் இதுதான். உலக அளவில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இருந்தாலும், இந்தியாவில் உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வளர்ச்சி ஓரளவுக்கு குறைவாக தான் இருக்கிறது. உலகின் டாப் 10 அதிக மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பட்டியலில் இதுவரை ஒரு இந்திய நிறுவனம் கூட இடம் பெற்றதில்லை.

இந்நிலையில் டாடா நிறுவனம் கடந்து ஜூலை மாத மதிப்பை கணக்கிடும்போது நிறுவனம் உலகின் டாப் 10 ஆட்டோமொபைல் வாகன நிறுவனங்களில் அதிக மதிப்புமிக்க நிறுவனமாக இடம் பிடித்துள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 51 பில்லியன் அமெரிக்க டாலராகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 4.27 லட்சம் கோடியாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 50 சதவீதமும் கடந்த நிதி ஆண்டில் 101 சதவீதமும் வளர்ச்சியை பெற்று இருந்தது. அதன் காரணமாக மிகப்பெரிய அளவில் இந்நிறுவனம் வளர்ந்து சர்வதேச அளவில் டாப் 10 நிறுவனங்களில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் மற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இந்திய நிறுவனங்கள் என்று இந்த ஒன்றுதான் இருக்கிறது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் டெஸ்லா நிறுவனம் தான் இருக்கிறது இந்நிறுவனம் 711.19 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலிடத்தில் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 307.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் மூன்றாவது இடத்தை சீனாவை செய்த பிஒய்டி என்ற நிறுவனம் 92.65 பில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பட்டியலில் நான்காவது இடத்தில் ஃபெராரி என்வி என்ற நிறுவனம் 74.02 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் குரூப் 71.26 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது. ஆறாவது இடத்தில் நிறுவனம் 68.29 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது. ஏழாவது இடத்தில் பிஎம்டபிள்யூ ஏஜி நிறுவனம் 59.54 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது.

எட்டாவது இடத்தில் போக்ஸ்வேகன் ஏஜி நிறுவனம் 58.18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது. ஹோண்டா மோட்டார் நிறுவனம் 56.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 9வது இடத்தில் இருக்கிறது. பத்தாவது இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 51 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் மாருதி சுஸூகி நிறுவனம் 48.36பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை பெற்றதாக இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் 43.41 அமெரிக்க டாலர் மதிப்பை பெற்றதாக இருக்கிறது. இதுபோக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஹுண்டாய் நிறுவனம் 37.88பில்லியன் அமெரிக்க டாலராகவும், கியா நிறுவனம் 32.29பில்லியன் அமெரிக்க டாலராகவும் மதிப்பை கொண்டுள்ளது. உலகின் மிகப் பிரபலமான நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 49.74 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கொண்டதாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய இவி கார் சந்தையில் 60% மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. கடந்த 2023ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 64,217 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து ரூப் டாப் மூலம் சோலார் பொருத்தப்பட்ட கார்களை வடிவமைக்கும் திட்டத்தையும் தற்போது ஆய்வு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்று தற்போது இந்தியாவின் டாப் 10 வாகன தயாரிப்பு நிறுவன பட்டியலில் இடம் பிடித்துள்ளது நிச்சயம் இந்தியர்களுக்கு பெருமையான தருணம்தான். தொடர்ந்து இந்நிறுவனம் முன்னேறி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இந்தியர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









