பெட்ரோல் செலவு ஃபுல்லா மிச்சமாகும்! இந்த மினி எலெக்ட்ரிக் பஸ் பற்றி தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 7 மீட்டர் கொண்ட அல்ட்ரா இவி என்ற புதிய எலெக்ட்ரிக் பஸ்சை பெங்களூருவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பஸ் ஒரு முறை சார்ஜ் போட்டால் 160 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் போட 2.5 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரவாஸ் என்ற பெயரில் பஸ் மற்றும் கார் ஆப்பரேட்டர்கள் மூலம் வாகன கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெங்களூருவில் இந்த வாகன கண்காட்சி பரவாஸ் 4.0 என்ற பெயரில் நடத்தப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. இதில் நிறுவனம் தனது அல்ட்ரா இவி 7எம் என்ற 7 மீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் பஸ்ஸை முதன்முதலாக காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த அல்ட்ரா இவி 7 மீட்டர் என்ற எலெக்ட்ரிக் பஸ் 213 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்டு எலெக்ட்ரிக் பஸ்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிக எடையை சுமந்து செல்வதற்காக அதிக பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இந்த பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை சாலைகளில் தாராளமாக பயன்படுத்த முடியும். இதை ஒரு மினி எலெக்ட்ரிக் பஸ் என்று கூட அழைக்கலாம்.
இந்த எலெக்ட்ரிக் பஸ்ஸின் பேட்டரியை பொருத்தவரை 200 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஐபி67 ரேட் செய்யப்பட்ட பேட்டரியாக இருக்கிறது. இந்த பேட்டரி மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் இயங்கும் வகையில் இந்த பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் பயணம் செய்ய இந்த பஸ் ஏற்றதாக இருக்கும்.
மேலும் இந்த பஸ் பேட்டரியை சார்ஜ் செய்ய அதிக நேரம் எல்லாம் தேவைப்படாது ஒரு முழு பேட்டரி சார்ஜ் ஆக 2.5 மணி நேரம் தான் தேவைப்படும். இதனால் ஒவ்வொரு ihரிப்புக்கு இடையிலேயே சார்ஜ் போட்டு பஸ்ஸை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. மினி பஸ் ஆபரேட்டர்கள் இந்த பஸ்ஸை வாங்குவதன் மூலம் பல்வேறு வகையில் பணத்தை சேமிக்க முடியும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பஸ்ஸில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை வழங்கி உள்ளது. பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக இதில் எலெக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக வாகனம் ஸ்டேபிளாக செல்வதற்காக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் இன்டெலிஜெண்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டமும் இதில் புகுத்தப்பட்டுள்ளன..
மேலும் இந்த பஸ்ஸில் ஆட்டோமேட்டிகாக பயணிகள் எண்ணும் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்ஸில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் டெக்னாலஜி இருக்கிறது. இதனால் அதிக தூரம் இந்த பஸ்ஸால் பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் போட்டால் 160 கிலோமீட்டர் ரேஞ்ச் கொடுப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் பஸ் சந்தையில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 2900 பஸ்களை பல்வேறு விதமான அரசுகளுக்கு தயாரித்து விற்பனை செய்துள்ளது. இது மட்டுமில்லாமல் இந்நிறுவனம் தயாரித்த பஸ்கள் 9 மீட்டர் 12 மீட்டர் செக்மெண்ட் பஸ்களாக இருக்கின்றன. தற்போது 7 மீட்டரில் சிறிய ரக பஸ்களையும் இந்நிறுவனம் தயாரித்து பல்வேறு நபர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய அரசு பொது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ள நிலையில், இந்த திட்டங்களுக்கு எல்லாம் உட்பட்டு வரும் வகையில்தான் டாடா நிறுவனம் இந்த பஸ்களை தயாரித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தங்கள் பஸ் வாங்கும் முடிவை எடுக்கும்போது இந்த பஸ்ஸை ஒரு சாய்ஸாக தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று வாகனம் செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால் பெட்ரோல் செலவு தான். இதனால் பஸ் போன்ற கனரக வாகனங்கள் தற்போது சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிசக்தியை நோக்கி பயணித்து வரும் நிலையில், இந்த சிறிய ரக எலெக்ட்ரிக் பஸ் நிச்சயம் தற்போது இயங்கி வரும் மினி பஸ்களுக்கு ஒரு மாற்றாக அமையும். இதன் விலை குறித்த விபரங்கள் வெளியாகும் போது நிச்சயம் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்


Click it and Unblock the Notifications








