எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்... பைக் மாதிரி மைலேஜ் கிடைத்தால் வேண்டாம் என்று யார் சொல்வார்கள்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பிரபலமான நெக்ஸான் காரில் புதிய சிஎன்ஜி வெர்சனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவில் சிஎன்ஜி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்துவரும் நிலையில், டாடா நிறுவனம் அதன் மற்றொரு சிஎன்ஜி காரை மார்க்கெட்டில் களமிறக்குகிறது. 2024 பாரத் மொபைலிட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட நெக்ஸான் சிஎன்ஜி ஆனது டாடா மோட்டார்ஸின் 3வது சிஎன்ஜி கார் ஆகும். விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நெக்ஸான் சிஎன்ஜி காரை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்காக...

டாடா மோட்டார்ஸின் ட்வின் சிஎன்ஜி டெக்னாலஜி உடன் நெக்ஸான் சிஎன்ஜி கார் உருவாக்கப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் டாடா நெக்ஸானுக்கும், புதிய நெக்ஸான் சிஎன்ஜி காருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. காருக்கு பின்னால் 'ஐ-சிஎன்ஜி' பேட்ஜ் வழங்கப்படும்.

tata will launch nexon cng

மற்ற டாடா சிஎன்ஜி கார்களில் உள்ளதை போன்று, நெக்ஸான் சிஎன்ஜி காரிலும் சிங்கிள் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் மற்றும் மாடுலர் ஃப்யுல் ஃபில்டர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. கார் பெட்ரோலில் இயங்குவதா அல்லது சிஎன்ஜி-இல் இயங்குவதா என்பதை தீர்மானிக்கும் ஸ்விட்ச் நிச்சயமாக இருக்கும். மற்ற டாடா சிஎன்ஜி கார்களை போன்று, இந்த காரையும் நேரடியாக சிஎன்ஜி-இல் ஸ்டார்ட் செய்யலாம்.

காருக்கு பின்பக்கத்தில் வழங்கப்படும் 2 சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் 30 லிட்டர்கள் கொள்ளளவில் இருக்கும். ஆக மொத்தத்தில் 60 லிட்டர்கள் கொள்ளளவில் சிஎன்ஜி -ஐ நிரப்பிக் கொள்ளலாம். சிஎன்ஜி (CNG) என்பது அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகும். மற்ற நிறுவனங்களின் சிஎன்ஜி கார்களில் ஒரேயொரு சிஎன்ஜி டேங்க் அளவில் பெரியதாக வழங்கப்படுகிறது.

tata will launch nexon cng

ஆனால், டாடா சிஎன்ஜி கார்களில் இரு சிலிண்டர்கள் சிறிய அளவில் வழங்கப்படுகின்றன. காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கு கூடுதல் இடவசதியை பெறுவதற்காக இந்த யுக்தியை டாடா மோட்டார்ஸ் கையாள்கிறது. மற்றப்படி காருக்கு உள்ளே, வழக்கமான டாடா நெக்ஸான் காரில் கிடைக்கும் அத்தனை அம்சங்களும் நெக்ஸான் சிஎன்ஜி காரிலும் கிடைக்கும்.

இதன்படி, எலக்ட்ரிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் போன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளிட்டவற்றை புதிய நெக்ஸான் சிஎன்ஜி காரில் எதிர்பார்க்கலாம். மற்றப்படி, நெக்ஸான் சிஎன்ஜி காரில் எந்த மாதிரியான என்ஜினை டாடா மோட்டார்ஸ் வழங்க உள்ளது என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

tata will launch nexon cng

எங்களுக்கு தெரிந்தவரையில், நெக்ஸானில் தற்சமயம் வழங்கப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது நெக்ஸான் சிஎன்ஜி காரில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் மைலேஜ் விஷயத்தை கருத்தில் கொண்டு, நெக்ஸான் சிஎன்ஜி காரில் சற்று குறைவான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்படும்.

நெக்ஸான் சிஎன்ஜி காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஏஎம்டி (AMT - Automated Manual Transmission) கியர்பாக்ஸ் உடன் விற்பனை செய்யப்பட உள்ள இந்தியாவின் முதல் சிஎன்ஜி காராக நெக்ஸான் சிஎன்ஜி விளங்கவுள்ளது. புதிய நெக்ஸான் ஐ-சிஎன்ஜி காரின் அறிமுகம் இந்த செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை நாட்களை அதிகம் கொண்ட செப்டம்பர் மாதம் துவங்கிவிட்டதால், வரிசையாக புதிய கார் அறிமுகங்களை இனி பார்க்கலாம். அவற்றுள், டாடா நெக்ஸான் ஐ-சிஎன்ஜி காரின் அறிமுகமும் ஒன்றாக இருக்கலாம். ஏற்கனவே, பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் கார் விரைவில் சிஎன்ஜி ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 1, 2024, 8:00 [IST]
English summary
Tata motors will launch nexon cng in coming weeks check all details here
மேலும்... #tata motors #tata nexon #nexon #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X