உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்த டாடா கார்... சோப்பு டப்பான்னு கிண்டல் பண்ணவங்க எல்லாம் ஆளையே காணோம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், தற்போது விற்பனையில் மிக பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது. 7 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். டாடா நெக்ஸான் கார் இந்த பிரம்மாண்டமான மைல்கல்லை எட்டுவதற்கு 7 வருடங்களை மட்டுமே எடுத்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற, முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசம் வைத்துள்ளது. டாடா நெக்ஸானுக்கு பிறகுதான், மற்ற இந்திய கார்கள் எல்லாம், இந்த சாதனையை படைக்க தொடங்கின.

Tata Nexon EV

டாடா நெக்ஸான் காரில், பெட்ரோல், டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதுடன், இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு கிடைத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் டீசல் வெர்ஷன்களில், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனில், 30kWh மற்றும் 40.5kWh பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

Tata Nexon

இதில், 30kWh வெர்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 325 கிலோ மீட்டர்கள் எனவும், 40.5kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 465 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் மாடலின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 14.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 7 ஆண்டுகளில் 7 லட்சம் நெக்ஸான் கார்களை விற்பனை செய்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனைதான். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்று சிறப்புமிக்க கார்களில், நெக்ஸானுக்கு எப்போதும் நிச்சயமாக தனி இடம் இருக்கும்.

வெளிநாடுகளில் ஒரு காலத்தில் சோப்பு டப்பாக்கள் என இந்திய கார்களை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அந்த பெயரை மாற்றி, பாதுகாப்பு விஷயத்தில் டாடா நெக்ஸான் தனி முத்திரை பதித்தது. எனவே இது சர்வதேச அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்த பெருமைக்குரிய கார்களில் ஒன்றாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கூடிய விரைவில், நெக்ஸான் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின்னர், டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 15, 2024, 23:14 [IST]
English summary
Tata nexon 7 lakh sales milestone all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+