வேட்டியை வரிந்து கட்டிய டாடா... விலை குறைவான காரை களமிறக்கி போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைக்க போறாங்க...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4m Compact SUV) ரகத்தை சேர்ந்த டாடா நெக்ஸான் கார், பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பயணத்தை வழங்கி வருகிறது.

குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற, முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானுக்கு உள்ளது. டாடா நெக்ஸானுக்கு அடுத்தபடியாகதான் மற்ற இந்திய கார்கள் எல்லாம் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்க ஆரம்பித்தன. எனவே பாதுகாப்பு விஷயத்தில், மற்ற அனைத்து கார் நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை வழங்கிய கார் என டாடா நெக்ஸானை குறிப்பிடலாம்.

Tata Nexon

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை 8.15 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.80 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் இதைக்காட்டிலும் குறைவான விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டாடா நெக்ஸான் காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான், பெயர் மாற்றம் செய்யப்பட்டு மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

Mahindra XUV 3XO

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை வெறும் 7.49 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 66 ஆயிரம் ரூபாய் குறைவு. எனவே வாடிக்கையாளர்கள் பலர் டாடா நெக்ஸான் காருக்கு பதிலாக, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்ஸான் காரின் விலை குறைவான புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வேரியண்ட்டின் விலை, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலைக்கு இணையாக இருக்கலாம்.

நெக்ஸான் காரின் இந்த விலை குறைவான புதிய வேரியண்ட் மூலம், இந்திய வாடிக்கையாளர்களை மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ பக்கம் செல்ல விடாமல் தடுக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே போட்டி அனல் பறந்து வருகிறது. கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) என இந்த செக்மெண்ட்டில் ஏராளமான கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் விற்பனைக்கு வரவுள்ள டாடா நெக்ஸான் காரின் விலை குறைவான புதிய வேரியண்ட், இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், போட்டியை இன்னும் கடுமையாக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. எது எப்படியோ, விலை குறைவான வேரியண்ட் என்பது, வாடிக்கையாளர்களுக்கு நன்மை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம்தான்!

More from DriveSpark

Article Published On: Saturday, May 11, 2024, 13:37 [IST]
English summary
Tata nexon affordable entry level variant launch soon details inside
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+