லாரியே வந்து மோதினாலும், யானை மாதிரி அசையாம நிக்கும்! டாடா நெக்ஸான் காரின் ஸ்டார் ரேட்டிங் வெளியானது!

டாடா நிறுவனம் சமீபத்தில் தனது அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் காரை பாரத் என்கேப் சோதனையில் கிராஷ் டெஸ்ட் செய்தது இந்த சோதனை முடிவில் அந்த கார் இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் பட்டியலில் ஒன்றாக சேர்ந்துள்ளது. சோதனையின் போது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு முதன்முதலில் நெக்ஸான் என்ற காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் 2017ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்தது. இந்த கார் அறிமுகமாகும் போதே மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். தொடர்ந்து இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது.

tata nexon Bharat Ncap results

இந்த காரின் சிறப்பான வடிவமைப்பு தான் இந்த காரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. முக்கியமாக குளோபல் என்கேப் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராக இருந்ததால் பலர் இந்த காரை விரும்பி வாங்கினார்கள். இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இந்த கார் இன்றளவும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரை அப்டேட் செய்து புதிய பொலிவுடன் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் உட்பகுத்தப்பட்டிருந்தன. இந்த காரில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இந்த காரை கிராஷ் டெஸ்ட் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்தது.

tata nexon Bharat Ncap results

அதன்படி பாரத் என்கேப் சோதனையில் இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் எல்லாம் தற்போது வெளியாகியுள்ளன. டாடா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான தளத்தில் இந்த சோதனை முடிவு குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் டாடா கார் தொடர்ந்து இந்த சோதனையிலும் 5 ஸ்டார் பெற்ற காராக மாறி உள்ளது.

டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள நெக்ஸான் கார் குறித்த கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளின் படி அந்நிறுவனம் பெரியவர்களுக்கான சோதனையில் மொத்தமுள்ள 32 புள்ளிகளில் 29.41 புள்ளிகளை பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விஷயத்தில் மொத்தம் உள்ள 49 புள்ளிகளில் 43.83 புள்ளிகளை நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tata nexon Bharat Ncap results

சோதனையுடன் தனது புதிய கூபே ஸ்டைல் எஸ்யூவி காரான டாடா கர்வ் மற்றும் கர்வ் இவி ஆகிய இரண்டு கார்களின் கிராஷ் டெஸ்ட் சோதனையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கார்களும் தற்போது ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார்களாக உள்ளன. டாடா நிறுவனம் தொடர்ந்து தரமான தயாரிப்புகளை வெளியிட்டு வருவதற்கு இது ஒரு முக்கிய முன் உதாரணமாக மாறி உள்ளது.

டாடா நிறுவனம் இந்த அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸ்டான் காரை கிராஷ் டெஸ்ட் செய்வதற்காக டாடா நெக்ஸான் பியர்லெஸ் பிளஸ் டீசல் மேனுவல் வேரியண்ட் காரை சோதனை செய்து பார்த்தது. இந்த கார் மொத்தம் 1638 கிலோ எடை கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கிராஷ் டெஸ்ட் சோதனை குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் காரை பொறுத்தவரை தற்போது அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தான் இந்த 5 ஸ்டார் ரேட்டிங் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பாதுகாப்பிற்காக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபகாலமாக பாதுகாப்பான கார்கள் தான் சிறப்பாக விற்பனையாக வருகின்றன. இந்த கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறந்த ஸ்டார்களை பெற்ற கார்கள் விற்பனையிலும் சிறப்பாக இருக்கின்றன. இந்நிலையில் டாடா நிறுவனத்தின் இந்த கார்கள் ஐந்து ஸ்டார்களை பெற்றுள்ளதால் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 19:09 [IST]
English summary
Tata nexon bharat ncap results 5 stars crash rating
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X