புது டாடா காரை பார்த்தாலே வாங்க தோணுதே... டெஸ்ட் டிரைவ் பண்ண ரெடியாகுங்க!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சிஎன்ஜி (CNG) கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது. இந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நெக்ஸான் சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கனவே நடைபெற்றுவரும் நிலையில், டெலிவிரிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸின் டீலர்ஷிப் ஷோரூக்களுக்கு புதிய நெக்ஸான் சிஎன்ஜி கார்கள் வர துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படங்களையும், புதிய நெக்ஸான் சிஎன்ஜி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் டாடா கார்களுள் ஒன்றாக நெக்ஸான் விளங்குகிறது. பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி எலக்ட்ரிக்கிலும் டாடா நெக்ஸான் விற்பனை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட காரை சிஎன்ஜி வெர்சனிலும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, பிப்ரவரியில் நடைபெற்ற 2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் நெக்ஸான் சிஎன்ஜி கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டது.

tata nexon cng in dealerships

கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்த உடனேயே நெக்ஸான் சிஎன்ஜி காருக்கான முன்பதிவுகளையும் டாடா மோட்டார்ஸ் துவங்கியது. இதனால், இன்னும் கார் டெலிவிரி செய்யப்படுவது மட்டும்தான் பாக்கி உள்ளது. இந்த நிலையில், கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்படுவதற்காக நெக்ஸான் சிஎன்ஜி கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பளபளப்பான சிவப்பு நிறத்தில் ஷோரூம் ஒன்றில் காட்சியளிக்கும் நெக்ஸான் சிஎன்ஜி காரை காணலாம். ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்), ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ எஸ், ப்யூர், ப்யூர் எஸ், கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+ மற்றும் ஃபியர்லெஸ்+ எஸ் என மொத்தம் 8 விதமான வேரியண்ட்களில் நெக்ஸான் சிஎன்ஜி கார் விற்பனை செய்யப்படுகிறது.

tata nexon cng in dealerships

இந்த சிஎன்ஜி காரினுள் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, 8 ஸ்பீக்கர்கள், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினை இயங்க வைக்க பெட்ரோல் நிரப்ப தேவையில்லை. அதற்கு பதிலாக, சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவை நிரப்ப வேண்டும். இதற்காக, காரின் பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியில் இரு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

tata nexon cng in dealerships

பொதுவாக, சிஎன்ஜி கார்களில் பூட் ஸ்பேஸில் ஒரேயொரு சிஎன்ஜி பெரியதாக வழங்கப்படும். ஆனால், டாடா மோட்டார்ஸ் அதன் சிஎன்ஜி கார்களில் சிறிய அளவில் 2 சிஎன்ஜி சிலிண்டர்களை வழங்குகிறது. இதனால், பூட் ஸ்பேஸ் பகுதியில் மற்ற பொருட்களை வைக்க பெரிய இடவசதி கிடைக்கிறது. நெக்ஸான் சிஎன்ஜி காரின் பூட் ஸ்பேஸ் பகுதி 321 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது.

அதுவே, சிஎன்ஜி அல்லாத நெக்ஸான் கார்களில் பூட் ஸ்பேஸ் பகுதியின் கொள்ளளவு 392 லிட்டர்கள் ஆகும். இரண்டிற்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை. டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்கு விற்பனையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி, டொயோட்டா டைசர் சிஎன்ஜி மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி கார்கள் போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை ஏற்கனவே டாப் கியரில் உள்ளது. விரைவில் நெக்ஸான் சிஎன்ஜி கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளதால், நெக்ஸான் கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர உள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் இந்த டாடா சிஎன்ஜி காருக்கு விற்பனையில் சவாலாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 14:39 [IST]
English summary
Tata nexon cng cars starts to reaching dealership showrooms for delivery
மேலும்... #tata motors #tata nexon #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X