மைலேஜை வாரி வழங்கும் காரை களமிறக்கும் டாடா... மாருதி காரின் மார்க்கெட்டை அடியோடு சரிக்க போகுது...

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்வது நெக்ஸான் (Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களில், டாடா நெக்ஸான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் கூட விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது. ஆனால் டாடா நெக்ஸான் காரில், சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் இல்லை. எனினும் இந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனை நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய சாலைகளில் தற்போது டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரின் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் சிஎன்ஜி காரை ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tata Nexon iCNG

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2024 பாரத் மொபிலிட்டி ஷோ-வில் (2024 Bharat Mobility Show), டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரால் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, இதன் பவர் அவுட்புட் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tata Nexon iCNG-Maruti Brezza CNG

அனேகமாக சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 100 பிஹெச்பி மற்றும் 150 என்எம் என்ற அளவில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் பவர் அவுட்புட் சற்று குறைந்தாலும் கூட, சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்பது உறுதி. டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில் முதலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் விற்பனைக்கு களமிறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர், 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் கார் ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகதான் இருந்து வருகிறது. தற்போதைய நிலையிலேயே இது இந்தியாவில் அதிகம் விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாகும். பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் கிடைப்பது, இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த சூழலில், சிஎன்ஜி வெர்ஷனின் வருகை, டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் என நாங்கள் கருதுகிறோம். டாடா நெக்ஸான் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களில் ஒன்றான மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிற்கு (Maruti Suzuki Brezza) இதன் காரணமாக கடுமையான நெருக்கடி ஏற்படுவவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் தற்போது சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைத்து வருகிறது. இது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு 'செக்' வைக்கும் வகையில்தான், நெக்ஸான் காரின் சிஎன்ஜி இன்ஜின் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 5, 2024, 21:04 [IST]
English summary
Tata nexon cng launch soon important details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+