மைலேஜில் மாருதியையே தூக்கி சாப்பிட போகும் டாடா கார்! இந்த மாதிரி ஒரு காரை இதுக்கு முன்னாடி யாருமே பாத்தது இல்ல

இந்திய சந்தையில் 2 புத்தம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. அவை டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் டாடா கர்வ் ஐசிஇ (Tata Curvv ICE) ஆகியவை ஆகும். இதில், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதை தொடர்ந்து டாடா கர்வ் காரின் ஐசிஇ மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வமான அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும் ஆகஸ்ட் இறுதிக்குள்ளாகவே டாடா கர்வ் ஐசி இன்ஜின் மாடலும் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆகஸ்ட் மாதத்துடன் டாடா நிற்க போவதில்லை. வரும் செப்டம்பர் மாதத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியமான கார் ஒன்று விற்பனைக்கு வரவுள்ளது. அது டாடா நெக்ஸான் சிஎன்ஜி (Tata Nexon CNG) கார் ஆகும். டாடா நெக்ஸான், மிகவும் பிரபலமான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.

Tata Nexon CNG

தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய வெர்ஷன்களில் டாடா நெக்ஸான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில்தான் இதன் சிஎன்ஜி வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள முதல் டர்போ பெட்ரோல் சிஎன்ஜி எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் சிஎன்ஜி பெறவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற சிஎன்ஜி கார்களை போலவே, டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரிலும், ட்வின் சிஎன்ஜி சிலிண்டர் தொழில்நுட்பம் இடம்பெறவுள்ளது.

Tata Nexon CNG Rear Profile

இந்த காரில் வழங்கப்படவுள்ள டர்போ பெட்ரோல் இன்ஜின், பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் எவ்வளவு? என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.

பொதுவாக பெட்ரோல் மூலமாக இயங்கும்போது கிடைக்கும் பவர் அவுட்புட்டை விட, சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது கிடைக்கும் பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கும். எனினும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது நாம் சிறப்பான மைலேஜை உறுதியாக எதிர்பார்க்கலாம். அனேகமாக ஒரு கிலோவிற்கு 25 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) காருக்கு நேரடி போட்டியாக, டாடா நெக்ஸான் சிஎன்ஜி களமிறங்கவுள்ளது. இதன் வருகை, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த மற்ற கார்களுக்கும் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு சக்தி வாய்ந்த சிஎன்ஜி எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 13:57 [IST]
English summary
Tata nexon cng launch soon timeline confirmed full details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+