டாடாவோட இந்த கார் மட்டும் வந்துச்சுனா மாருதி பொழப்பு சிரிச்சிரும்! இன்னும் 2, 3 வாரத்துல இது நடக்கதான் போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய 3 வெர்ஷன்களில் டாடா நெக்ஸான் கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் நான்காவதாக டாடா நெக்ஸான் காரில், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி (Tata Nexon CNG) கார், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி ஷோ (Bharat Mobility Show) வாகன திருவிழாவில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து வரும் வாரங்களில் டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது.

Tata Nexon CNG

இதன் மூலம் இந்தியாவில் டர்போ இன்ஜின் உடன் விற்பனைக்கு வரவுள்ள முதல் சிஎன்ஜி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் சிஎன்ஜி பெறவுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பம் இடம்பெறவுள்ளது. பொதுவாக சிஎன்ஜி கார்களில், பெரிதாக ஒரு சிலிண்டர் வழங்கப்படும். ஆனால் இந்த ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தின்படி, அளவில் சிறிய 2 சிலிண்டர்கள் வழங்கப்படும். இது பின் பகுதியில் அதிக பொருட்களை வைத்து கொள்ள உதவி செய்யும்.

Maruti Suzuki Brezza

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) காருக்கு நேரடி போட்டியாக டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் மைலேஜ் (Mileage) அனேகமாக ஒரு கிலோவிற்கு 25-26 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என 3 வெர்ஷன்களில் கிடைப்பதால், ஏற்கனவே இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் உள்ளது. இந்த சூழலில் வரவுள்ள சிஎன்ஜி வெர்ஷன், டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த உதவி செய்யும் என கருதுகிறோம்.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதை தொடர்ந்து கர்வ் காரின் ஐசி இன்ஜின் மாடல் மற்றும் நெக்ஸான் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. எனவே எதிர்வரும் பண்டிகை காலத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2024, 23:10 [IST]
English summary
Tata nexon cng launch weeks away full details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+