பெட்ரோல் விலையை பத்தி கவலைப்பட வேண்டாம்! டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் வந்தாச்சு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று தனது அதிகாரப்பூர்வமான நெக்ஸான் காரின் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 8.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இந்த கார் டர்போ சார்ஜர் பெட்ரோலின் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் சிஎன்ஜி காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. சிஎன்ஜியை பயன்படுத்தினால் எரிபொருள் செலவு குறைவாக இருக்கும் என்பதால் பலர் இந்த ரக கார்களை வாங்கி வருகிறார்கள். டாடா நிறுவனம் டூயல் சிலிண்டர் சிஸ்டத்துடன் சிஎன்ஜி வாகனங்களை அறிமுகப்படுத்தியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Tata Nexon CNG launched

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில் பெட்ரோல் வெர்ஷன் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் ரிவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நெக்ஸான் காரின் ஸ்மார்ட் பிளஸ் வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ளது .

இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட் வேரியன்டை விட ரூ70 ஆயிரம் அதிகமான விலையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 8.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட் பிளஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 9.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. பியூர் மற்றும் ப்யூரி எஸ் வேரியண்டுகள் முறையே ரூபாய் 10.69 லட்சம் மற்றும் ரூபாய் 10. 99 லட்சம் என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tata Nexon CNG launched

டாப் வேரியன்டான கிரியேட்டின் வேரியன்ட் ரூ 11.69 லட்சம் என்ற விலையிலும், கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட் ரூ 12.19 லட்சம் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. முழுமையான ஃபியர்லெஸ் பிளஸ் பிஎஸ் வேரியண்ட் ரூபாய் 14.59 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக இந்த கார் ரூபாய் 8.99 லட்சம் முதல் ரூபாய் 14.59 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நெக்ஸான் சிஎன்ஜி காரை கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தியது போலவே இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரட்டை சிலிண்டர் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட டாடா வாகனங்கள் சமீப நாட்களாக சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

Tata Nexon CNG launched

டாடா பஞ்ச் காரிலும் இப்படியான டூயல் சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி செட் படுத்தப்பட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரணத்தோடு சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. டாடா நெக்ஸான் காரின் விற்பனை சமீப நாட்களாக லேசாக சரிந்தது இருந்தாலும், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார் பட்டியலில் இந்த கார் தொடர்ந்து இருக்கிறது. இந்த காரின் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில் 230 லிட்டர் அளவிற்கு பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் தலா 30 லிட்டர் கொண்ட இரண்டு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் இருந்த ஸ்பேர் வீல் காருக்கு அடியில் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிஎன்ஜி சிஸ்டத்தில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சிஎன்ஜி செட்டப்பில் மைக்ரோ ஸ்விட்ச் வழங்கி உள்ளது. இது போக 6 சிலிண்டர் மவுண்டிங் சிஸ்டமும் உள்ளது. இதுபோக சிங்கிள் இசியூ யூனிட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் எல்லாம் தரமான மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் ரிவோட்ரான் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதுக்கு பயன்படுத்தி உள்ளது. ஆனால் நேரடியாக பெட்ரோல் இன்ஜினில் இயங்கும் போது கிடைக்கும் டார்க் மற்றும் பவர் லேசாக சிஎன்ஜி மூலம் இயங்கும் போது குறைந்து கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சிஎன்ஜி காரை அறிமுகப்படுத்துவதன் மூலம் டாடா நெக்ஸான் காரின் விற்பனை அதிகரிக்க முயற்சி செய்கிறது. மேலும் இந்த காரை வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணிக்கும் ஆப்ஷன் கிடைக்கிறது. கிட்டத்தட்ட பெட்ரோல் காரை விட பாதி செலவில் இந்த காரில் பயணம் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நிச்சயம் இது சாத்தியம்தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 14:41 [IST]
English summary
Tata nexon cng launched in india starting at rs 8 99 lakh
மேலும்... #tata motors #india #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X