டாடாவோட புதிய சிஎன்ஜி காருல இந்த அம்சங்கள் எல்லாம் இடம் பெற போகுதா! மாருதி சிஎன்ஜி பிரிவிக்கு ஆப்பு கன்ஃபார்ம்

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சூப்பரான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் டாடா நெக்ஸான் (Tata Nexon)-ம் ஒன்றாகும். உயிர்களை பாதுகாப்பதில் இந்த கார் கில்லாடி என கூறலாம். இந்த விஷயத்தில் அது ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையேப் பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது . இத்தகைய கார் மாடலை டாடா மோட்டார்ஸ் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் விரைவில் சிஎன்ஜி ஆப்ஷனும் இணைக்கப்பட இருக்கின்றது. இந்த ஆப்ஷனின் வருகைக்கான அஸ்திவாரத்தை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் போட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி-யின் சோதனையோட்டம் மிக தீவிரமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலிலேயே நெக்ஸானில் சிஎன்ஜி தேர்வைக் களமிறக்கும் பணியில் டாடா களமிறங்கி இருக்கின்றது. இந்த கார் பலரின் கவனத்தை ஏற்கனவே ஈர்க்க தொடங்கிவிட்டது.

Tata nexon cng expectations

இதற்கு அந்த காரில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படும் சில முக்கிய அம்சங்களே காரணமாக உள்ளன. அப்படி என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை நெக்ஸான் ஐசிஎன்ஜி பெற இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவல் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

எஞ்சின் விபரம்: டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே சிஎன்ஜி-யில் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும். பெட்ரோலில் இயங்கும்போதே இந்த திறனை மோட்டார் வெளியேற்றும்.

சிஎன்ஜி-யில் என்ன மாதிரியான திறனை அது வெளியேற்றும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தியாவிலேயே டர்போ எஞ்சின் கொண்ட முதல் சிஎன்ஜி கார் மாடல் இதுவே ஆகும். ஆகையால், இந்தியாவில் விற்பனையில் இருப்பதிலேயே அதிக திறனை வெளியேற்றக் கூடிய சிஎன்ஜி காராக டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி இருக்கும் என நம்பப்படுகின்றது.

இரட்டை சிலிண்டர் செட்-அப்: டாடா மோட்டார்ஸே இந்தியாவில் இரட்டை சிலிண்டர்களுடன் சிஎன்ஜி காரை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் ஆகும். இரட்டை சிலிடண்டர்களால் பூட் ஸ்பேஸ் அதிகம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது டாடா சிஎன்ஜி கார்களில் தவிர்க்கப்பட்டு உள்ளது. மற்ற நிறுவனங்கள் இதைச் செய்ய தவறிவிட்டன.

அதாவது, ஒரே ஒரு சிலிண்டரை பெரியதாக வழங்குவதற்கு பதிலாக, அதை இரண்டாக வழங்கி இட ஆக்கிரமிப்பை டாடா குறைத்திருக்கின்றது. இதே வசதியுடனேயே டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி-யும் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. எனவே அதிக லக்கேஜை இதிலும் ஏற்றிச் செல்ல முடியும். இதன் பூட் ஸ்பேஸ் 230 லிட்டர்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

பாதுகாப்பு அம்சங்கள்: அதிக பாதுகாப்பு திறனுக்கு பெயர்போனதே டாடா கார்கள். அந்தவகையில், நெக்ஸான் ஐசிஎன்ஜி-யும் அதீத பாதுகாப்பு திறன்மிக்கதாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது. குறிப்பாக, இது சிஎன்ஜி கார் என்பதால் கூடுதல் பாதுகாப்பு கருவிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக வெப்பத்தை தவிர்த்தல், சிஎன்ஜி கசிவை தவிர்க்கும் அம்சம், வாயு கசிவு ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் கருவி போன்ற அம்சங்களே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

மைலேஜ் திறன்: இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கே 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், இது துள்ளியமான மைலேஜ் திறன் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அறிமுகத்தின்போது காரின் உண்மையான மைலேஜ் திறன் பற்றிய விபரங்களை டாடா மோட்டார்ஸ் அறிவிக்கும்.

விலை எதிர்பார்ப்பு: சிஎன்ஜியில் இயங்கும் வகையில் சில மாற்றங்களைக் கொண்டு இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதால் சற்று அதிக விலையைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான நெக்ஸானைக் காட்டிலும் 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அதிக விலையை அதுக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இதன் துள்ளியமான விலை விபரமும் அறிமுகத்தின்போதே தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸா, இந்த கார் மிக மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்கது. மிக மோசமான விபத்துகளில் இருந்தும்கூட இந்த கார் பயணிகளைக் காத்திருக்கின்றது. இதற்கு சான்றாக கடந்த கால நெக்ஸான் விபத்து சம்பவங்கள் உள்ளன. கடுமையான விபத்திலும் இந்த கார் தன்னுடைய பயணிகளை பத்திரமாக பாதுகாத்திருக்கின்றது. இத்தகைய பாதுகாப்பு திறனைக் கொண்டதாகவே நெக்ஸான் சிஎன்ஜியும் இருக்கப் போகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 5:00 [IST]
English summary
Tata nexon cng model highlights and expectations
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+