இந்தியாவிலேயே இப்படி ஒரு டெக்னாலஜியோட வரும் முதல் கார் இது தான்! நெக்ஸான் சிஎன்ஜி கார் செய்யப்போகும் மேஜிக்!

டாடா நிறுவனத்தின் எக்ஸாம் ஐ சிஎன்ஜி கார் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் கான்செப்ட் வெர்ஷனாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த கார் அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்கள் முழுமையாக காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு நெக்ஸான் காரை முதன்முதலாக அறிமுகப்படுத்திய போது இந்த காருக்கு மிகவும் வரவேற்பு இருந்தது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கினார்கள். தற்போது வரை 6 லட்சத்திற்கும் அதிகமான நெக்ஸான் கார்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது நெக்ஸான் கார் கம்பஷன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் ஆகிய இரண்டு வெர்ஷன்களில் விற்பனையாகி வருகிறது.

Tata Nexon CNG

இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கியமான காரணம் குளோபல் என்கேப் ரேட்டிங்கில் இந்த கார் 5 ஸ்டார்களைப் பெற்று தரமான தயாரிப்பாக இருப்பதுதான். இதனால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வருகின்றனர். இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த காரில் புதிய இன்ஜின் ஆப்ஷனை அறிமுகப்படுத்துவதற்காக டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி காரை உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி மாதம் நடந்த பாரத் குளோபல் கண்காட்சியில் இதன் கான்செப்ட் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் புரொடெக்ஷன் வெர்ஷன் கார் அடுத்த ஒரு சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இது விற்பனைக்கு வந்தால் இந்தியாவின் முதல் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கூடிய கார் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் வருவது இதுதான்
இந்தியாவிலேயே முதல் முறையாகும்.

Tata Nexon CNG

சமீபத்தில் வெளியான டாடா நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்துள்ள நிலையில், டாடா நிறுவனம் ட்வின் சிலின்டர் தொழில்நுட்பத்துடன் அல்ட்ரா மற்றும் பஞ்ச் ஆகிய கார்களை சிஎன்ஜி வெஷனை அறிமுகப்படுத்தியது. இதுபோக ஐசிஎன்ஜி தொழில்நுட்பத்தில் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.

இந்த இரு கார்களும் இரட்டை சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி காரில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையான பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும் பிரச்சனையை சரி செய்து அதிக பூட்ஸ்பேஸ் உடன் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது. இதனால் இந்த காரின் பிராக்டிகல் அம்சம் சிறப்பாக இருந்தது. இந்தியாவிலேயே இரட்டை சிலிண்டர் கொண்ட ஐசிஎன்ஜி தொழில்நுட்பம் கொண்ட கார் இதுவாக தான் இருந்தது.

Tata Nexon CNG

இந்நிலையில் டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரில் இதே தொழில்நுட்பத்தை உட்பகுத்தி ஐசிஎன்ஜி கொண்ட காரை தயாரித்துள்ளது. இந்த கார் 230லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் வழக்கம் போல இரண்டு சிலிண்டர்கள் இருக்கும் இது 60லிட்டர் கெப்பாசிட்டி கொண்ட சிலிண்டர்களாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பூட் பகுதிக்கு கீழே வெளியே தெரியாதபடி பொருத்தப்படுகிறது. ஸ்பேர் வீல்கள் பாடிக்கு கீழ்ப்பகுதியில் இருக்கும் படி வடிவமைக்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் இந்த சிஎன்ஜி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கார் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மலைப்பகுதிகளில் ஏறும்போது எந்தவித தொய்வும் இல்லாமல் இது சிறந்த பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதனால் மக்கள் இந்த காரில் துணிந்து அனைத்து இடங்களிலும் பயணம் செய்யலாம்.

காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட காருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக நகர் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் பலர் சிஎன்ஜி ரக கார்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். டாடா நெக்ஸான் காரில் சிஎன்ஜி தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 15:50 [IST]
English summary
Tata nexon cng upcoming turbo cng top details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X