அந்த கால அம்பாசிடர் மாதிரி இருக்கு!! டாடா புதுசா உருவாக்கும் காரை பற்றி தான் எங்கும் பேச்சு...

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கார்கள் வடிவமைப்பில் வேகமாக பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2017இல் நெக்ஸான் மூலமாக இந்திய எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய டாடா நிறுவனம், அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்வ் காரை அறிமுகம் செய்யவுள்ளது. நெக்ஸானின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடலாக கர்வ் காரை ஏன் கூறுகின்றோம்? வாருங்கள் அதனை பற்றி இனி விவாதிக்கலாம்.

வெளிப்பக்க & உட்பக்க தோற்றம்: டாடா நிறுவனம் கார்களின் ஹெட்லைட் வடிவத்தில் அதன் கர்வ் கான்செப்ட்டின் மூலமாக புதிய பாணியை கொண்டுவந்துள்ளது. காரின் முன்பக்கத்தில் முழு அகலத்திற்கும் லைட் பாரை வழங்குவதுதான் அந்த யுக்தி ஆகும். இத்தகைய ஹெட்லைட் செட்-அப்பை ஏற்கனவே நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் பார்த்திருந்தோம். அதனை புதிய கர்வ் எஸ்யூவி காரிலும் டாடா நிறுவனம் தொடரும்.

common things between 2 tata cars

2024 பார்த் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் கர்வ் எஸ்யூவி கார் விற்பனைக்கு தயாரான தோற்றத்தில் இருந்தது. கர்வ் காரின் முன்பக்கத்தில் கூர்மையான வடிவில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் முன் பம்பரின் கீழ்பகுதிகளில் க்ரோம் இன்செர்ட்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதேபோல், கர்வ் காரின் உட்பக்கத்திலும் டேஸ்போர்டு மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான டச் பேனலும் கிட்டத்தட்ட தற்சமயம் நெக்ஸானில் உள்ளதை போன்றே கண்காட்சியில் இருந்தது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்ட இரட்டை டிஜிட்டல் டிஸ்பிளேவை புதிய கர்வ் காரிலும் எதிர்பார்க்கலாம். நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே 10.25 இன்ச்சிலும், பொழுதுப்போக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் திரை 12.3 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

common things between 2 tata cars

இவை மட்டுமின்றி, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஹைட் அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள் மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பமும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் இருந்து கர்வ் காரில் கொடுக்கப்படலாம். அதேபோல், நெக்ஸானில் பயணிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் 6-ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஆங்கர்களையும் புதிய கர்வ் காரில் எதிர்பார்க்கலாம்.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆப்ஷன்கள்: தோற்றத்தில், தொழிற்நுட்ப அம்சங்களில் மட்டுமின்றி, என்ஜின் ஆப்ஷன்களையும் நெக்ஸானில் இருந்து கர்வ் எஸ்யூவி கார் பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. நெக்ஸான் காரில் கடந்த சில வருடங்களாக 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

common things between 2 tata cars

இருப்பினும், இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் கர்வ் காரில் வழங்கும் இயக்க ஆற்றலில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, நெக்ஸானை காட்டிலும் பஞ்ச் காரில் இந்த என்ஜின் சற்று கூடுதல் ஆற்றலை வழங்கும் வகையில் வழங்கப்படுமாம். டீசல் என்ஜினின் பவர் அவுட்-புட்டில் எந்த மாற்றமும் இருக்காது. நெக்ஸான் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதனை கர்வ் காரில் எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் காராகவும் எதிர்காலத்தில் கர்வ் காரை கொண்டுவரும் திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், கர்வ் இவி எலக்ட்ரிக் கார் தான் முதலாவதாக வரவுள்ளது. அதன்பின்பே, பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கர்வ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கர்வ் பெட்ரோல்/ டீசல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.50 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

common things between 2 tata cars

நெக்ஸானை காட்டிலும் அளவில் கொஞ்சம் பெரியதாக உருவாக்கப்படுவதால், விற்பனையில் நெக்ஸானுக்கும், கர்வ் காருக்கும் இடையே போட்டி இருக்காது. இருப்பினும், தோற்றத்திலும், தொழிற்நுட்பங்கள் ரீதியாகவும் ஒரே மாதிரியாக இருப்பதால் நெக்ஸானை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை கர்வ் கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. ஆனால், இதைதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எதிர்பார்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 18, 2024, 22:12 [IST]
English summary
Tata nexon curvv common things between 2 tata suv cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X