இந்த விஷயத்துல டாடாவ அடிச்சுக்க புதுசாதான் ஒருத்தன் பிறந்து வரனும்போல.. மாருதியாலகூட பக்கத்துல நிக்க முடியாது!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான்.இவி (Tata Nexon EV) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக இ-கார் ஆகும். இந்த கார் மாடலே மிக மிக அதிக பாதுகாப்பானது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவிற்காக இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட பாரத் என்சிஏபி (Bharat New Car Assessment Programme), சமீபத்தில் இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வின் வாயிலாகவே நெக்ஸான்.இவி அதிக பாதுகாப்பானது என்பது தெரிய வந்திருக்கின்றது.

அந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கையே பாதுகாப்பு விஷயத்தில் அள்ளி குவித்து இருக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷனும் இதேபோல் பாதுகாப்பு விஷயத்தில் அதிக ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, அதுவும் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையே பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Tata nexon ev 5 star

நெக்ஸான்.இவி பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 29.86 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 24 புள்ளிகளுக்கு 23.95 புள்ளிகளையும் இந்த கார் பெற்றிருக்கின்றது. இது மிக மிக அதிகபட்ச தர புள்ளிகள் ஆகும். இத்தகைய உச்சபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இதற்கு பாரத் என்சிஏபி ஐந்து ஸ்டார்களை வாரி வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, காரின் முன் பக்க உறுதித் தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 16 புள்ளிகளுக்கு 14.26 புள்ளிகளையும், பக்கவாட்டுக்கான உறுதித் தன்மைக்காக 16க்கு 15.60 புள்ளிகளையும் இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இதுபோன்று அனைத்திலும் மிக மிக சிறப்பான பாதுகாப்பு புள்ளிகளையே இந்த கார் மாடல் தற்போது பெற்றிருக்கின்றது நெக்ஸான்.இவி.

இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக பன்முக ஏர் பேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பாதசாரிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் அம்சம் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஏகப்பட்ட முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் டாடா மோட்டாரிஸ் வழங்கி இருக்கின்றது.

டாடா நெக்ஸான்.இவி தற்போது இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மீடியம் ரேஞ்ஜ் (Medium Range) மற்றும் லாங் ரேஞ்ஜ் (Long Range) ஆகியவையே அவை ஆகும். இதில் மீடியம் ரேஞ்ஜில் 30.2 kWh பேட்டரி பேக்கும், லாங் ரேஞ்ஜ் வேரியண்டில் 40.5 kWh பேட்டரி பேக்கும் வழங்கப்படுகின்றது.

Tata nexon ev 5 star bncap crash test

இதில் முதல் ஒன்றில் ஓர் முழுமையான சார்ஜில் 325 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்றில் 465 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டும் அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ரேஞ்ஜ் திறன் ஆகும். இத்துடன் 7.2 kW ஏசி சார்ஜரும் ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த எலெக்ட்ரிக் காருடன் வழங்கப்படுகின்றது.

இதன் வாயிலாக எங்கு வைத்து வேண்டுமானாலும் டாடா நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீத சார்ஜை 6 மணி நேரத்திற்குள்ளாக ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், 4 லெவல் பிரேக் ரீஜெனரேஷன் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான்.இவி பாதுகாப்பு விஷயத்தில் ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருப்பது இந்திய மின்சார கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த காருக்கு மின்சார கார் பிரியர்கள் மற்றும் அதிக பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்ப்போர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2024, 15:47 [IST]
English summary
Tata nexon ev achieves 5 star safety rating in bharat ncap tests
மேலும்... #tata motors #tata nexon #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+